[X] Close

வயநாடு மக்களவைத் தொகுதியில் ராகுலுக்கு எதிராக பாஜக கூட்டணி வேட்பாளர் துஷார் வெள்ளாபள்ளி போட்டி


  • kamadenu
  • Posted: 02 Apr, 2019 08:46 am
  • அ+ அ-

ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரையில் அமமுக வேட்பாளரும், முன்னாள் அமைச்சர் காளிமுத்து மகனுமான டேவிட் அண்ணாத்துரை நாம் தமிழர் கட்சி வேட்பாளரான சீமானின் மைத்துனர் என்பதால் அவரை எதிர்த்து சீமான் வேட்பாளரை நிறுத்துவாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், தமிழகத்தில் 39 தொகுதியிலும் தனித்து களம் இறங்குவதாக அறிவித்துள்ளார். ஆனால், இன்னும் அவர் இன்னும் வேட்பாளரை அறிவிக்கவில்லை. திமுக, அதிமுக, அமமுக,கம்யூனிஸ்ட்கள், விடுதலை சிறுத்தை கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டனர்.

மதுரை மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளராக முன்னாள் மேயர் விவி.ராஜன் செல்லப்பா மகன் ராஜ் சத்தியனும், திமுக கூட்டணியில் சிபிஎம் வேட்பாளராக சு.வெங்கடேசனும், அமமுக வேட்பாளராக முன்னாள்அமைச்சர் காளிமுத்து மகனும், அமமுக இளைஞர் அணி செயலாளருமான டேவிட் அண்ணாத்துரை போட்டியிடுகின்றனர்.

டேவிட் அண்ணாத்துரைக்கு மிகப்பெரிய அரசியல் குடும்ப பராம்பரியம், அதிமுகவில் இன்னும் அவரது தந்தையின் விசுவாசிகள் நிறையபேர் உள்ளதும் சாதகமாக அமைந்துள்ளது.

அதிமுகவில் பழைய கட்சிக்காரர்களும் இன்னும் காளிமுத்து மீது நல்ல மதிப்பும் மரியாதையும் வைத்துள்ளதால் அவர் அண்ணாத்துரையை எதிர்த்து வேலைப்பார்க்காமல் அமைதியாக வாய்ப்புள்ளது. அண்ணாத்துரை அவர்களை ரகசியமாக சந்தித்து டேவிட் அண்ணாத்துரை வளைத்தும் வருகிறார். மேலும், டேவிட் அண்ணாத்துரை வேட்பாளராக அறிவிக்கப்படுவதற்கு முன்பே டிடிவி.

தினகரனுடன் மதுரை மாவட்டத்தில் உள்ள சிஎஸ்ஐ, ஆர்சி கிறிஸ்தவ பேராயர்களை சந்தித்து ஆதரவுதிரட்டினார். இவர் கிறிஸ்தவராக இருப்பதால் இவருக்கு அவர்கள் ஆதரவு கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. திமுக கூட்டணி சார்பில் இந்த தொகுதியில் எழுத்தாளர் சு.வெங்கடேசன் போட்டியிடுகிறார்.

அதிமுக சார்பில் முன்னாள் மேயர் விவி.ராஜன் செல்லப்பா எம்எல்ஏ மகன் போட்டியிடுகிறார்.மற்ற கட்சியினர் மதுரையில் போட்டியிட்டாலும் அதிமுக, சிபிஎம், அமமுக வேட்பாளர்களுக்கு இடையே மட்டுமே வெற்றிக்கான போட்டி இருக்கும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். அதற்காக டேவிட் அண்ணாத்துரையை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. அவரது தந்தையை போன்ற அவரதுபேச்சாற்றால், டிடிவி.தினகரன் தேர்தல் வியூகம் அவரை வெற்றிக்கான போட்டியில் கொண்டு சென்றாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

ஆனால், தொடர்ந்து பொதுத்தேர்தல்களில் தனித்துப்போட்டியிடும் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு நடுநிலை வாக்காளர்கள் மத்தியில் சமீப காலமாக ஆதரவு அதிகரித்துள்ளது. படித்த இளைஞர்கள், வழக்கறிஞர்கள், மருத்துவர்கள், அரசு ஊழியர்கள் மத்தியிலும்,

சமூக வலைத்தளங்களிலும் அவருக்கான ஆதரவு கூடியுள்ளது. சீமானின் அவரது பேச்சை ரசிக்க, அவரது கூட்டத்திற்கு வருவோர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. அதனால், அவரது கட்சி வெற்றி கனியைபறிக்காவிட்டாலும் இந்த முறை, மற்ற கட்சிகளின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் சக்தியாக உருவெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மதுரை மக்களவைத்தொகுதியில் நாம் தமிழர் கட்சியினர் மக்களுக்கான போராட்டங்களை கையில் எடுப்பதிலும், தொடர்ந்து பொதுக்கூட்டங்கள் நடத்துவதிலும்மதுரை தொகுதியில் நாம் தமிழர் கட்சியினர் சுறுசுறுப்பாக செயல்பட்டனர். ஆனால், தற்போது அமமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் டேவிட்அண்ணாத்துரை, சீமானின் மைத்துனர் ஆவார்.

டேவிட் அண்ணாத்துரையின் சகோதரியைதான் சீமான் திருமணம் செய்துள்ளார். இருவரும் குடும்ப ரீதியாக நல்ல நட்பில் உள்ளனர். அதனால், அரசியல் ரீதியாக மைத்துனரை எதிர்த்து சீமான் வேட்பாளராக நிறுத்துவரா? அவரை எதிர்த்து மதுரை மக்களவைத்தொகுதியில் பிரச்சாரம் செய்வாரா? அல்லது பெயரளவுக்கு வேட்பாளரை நிறுத்திவிட்டு, மதுரை மக்களவைத்தொகுதியில் பெரியளவில் பிரச்சாரம் செய்யாமல்விட்டுவிடும் மனநிலை உள்ளாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதுகுறித்து சீமானிடம் கேட்டபோது,  "23ம் தேதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். நமக்கு சொந்தம், கிந்தம், மாமன், மச்சான், அப்பன், சித்தப்பன் என்றெல்லாம் கிடையாது. கொள்கைதான்முக்கியம்" என்றார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close