[X] Close

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்


12

  • kamadenu
  • Posted: 02 Apr, 2019 08:50 am
  • அ+ அ-

மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தனித்துப் போட்டியிடுகிறது. 1,300-க்கும் மேற்பட்டோர் தேர்தலில் போட்டியிட விருப்ப மனுக்களை தாக்கல் செய்தனர்.

அவர்களிடம் நேர்காணல்நடத்தப்பட்டு, வேட்பாளர்களும் தெரிவு செய்யப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது.

வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியிடப்படும் என்றுகட்சித் தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து வரும் 24-ம் தேதி கோவை கொடீசியா வளாகத்தில் வேட்பாளர் அறிமுகக் கூட்டம் நடக்க உள்ளது. பாஜக போட்டியிடும் ராமநாதபுரம், கோவை, கன்னியாகுமரி, சிவகங்கை, தூத்துக்குடியில் முக்கிய வேட்பாளர்களைக் களமிறக்க கமல் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இவற்றில், ஏதாவது ஒருதொகுதியில் கமல்ஹாசன் போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, ராமநாதபுரத்தில் போட்டியிட அதிகம் வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.

நடிகர் நாசர் மனைவி கமீலாநாசர் மத்திய சென்னை தொகுதியிலும், நடிகை ஸ்ரீபிரியா திருவாரூர் தொகுதியிலும், கவிஞர் சிநேகன் சிவகங்கை தொகுதியிலும் போட்டியிட வாய்ப்பு உள்ளதாகவும் மக்கள் நீதி மய்யம் வட்டாரங்களில் கூறப்படுகிறது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close