[X] Close

18 நாட்கள் முதல்கட்ட தேர்தல் சுற்றுப்பயணம்: திருவாரூரில் நாளை பிரச்சாரம் தொடங்குகிறார் ஸ்டாலின்


stalin

  • kamadenu
  • Posted: 19 Mar, 2019 09:35 am
  • அ+ அ-

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது முதல்கட்ட தேர்தல் பிரச்சாரத்தை திருவாரூரில் நாளை தொடங்குகிறார். தொடர்ந்து 18 நாட்கள் அவர் தீவிர பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

தமிழகத்தில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் தொகுதிப் பங்கீடு முடிந்து, வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டு விட்டனர். காங்கிரஸ் வேட்பாளர்கள் மட்டும் நாளை அறிவிக்கப்படுவா் என கூறப்படுகிறது. திமுக 20 மக்களவைத் தொகுதிகளிலும், இடைத்தேர்தல் நடக்கவுள்ள 18 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.

இந்நிலையில், திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மு.க.ஸ்டாலின் தனது முதல்கட்ட பிரச்சாரத்தை திருவாரூரில் நாளை தொடங்குகிறார். ஏப்ரல் 6-ம் தேதி வரை 18 நாட்கள் 28 மக்களவைத் தொகுதிகள், 17 சட்டப்பேரவைத் தொகுதிகளில் அவர் தீவிர பிரச்சாரம் மேற்கொள்கிறார். அவரது பிரச்சார சுற்றுப்பயண விவரம் வருமாறு:மார்ச் 20 – திருவாரூர், நாகை, தஞ்சை, 21 – பெரம்பலூர், 22 –சேலம், தருமபுரி, பாப்பிரெட்டிப்பட்டி, 23 – தருமபுரி, அரூர், திருவண்ணாமலை, 24 – வட சென்னை,பெரம்பூர், 25 – காஞ்சிபுரம், திருப்போரூர், திருவள்ளூர், பூந்தமல்லி, 26– திண்டுக்கல், நிலக்கோட்டை, 27 – தேனி, பெரியகுளம், ஆண்டிப்பட்டி, 28 – மதுரை, விருதுநகர், சாத்தூர், 29 – சிவகங்கை, மானாமதுரை, ராமநாதபுரம், பரமக்குடி, 30 – கிருஷ்ணகிரி, ஓசூர், 31 – வேலூர், ஆம்பூர், குடியாத்தம்,ஏப்ரல் 1 – அரக்கோணம், சோளிங்கர், தென் சென்னை, 2 - நீலகிரி, 3 – திருப்பூர், கோவை, 4 – பொள்ளாச்சி, ஈரோடு, 5 – கரூர், கள்ளக்குறிச்சி, 6 – விழுப்புரம், ஆரணி ஆகிய தொகுதிகளில் பிரச்சாரம் செய்கிறார்.

மீதமுள்ள 12 மக்களவைத் தொகுதிகள், விளாத்திக்குளம் சட்டப்பேரவைத் தொகுதியில் 2-ம்கட்டமாக ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொள்வார் என கூறப்படுகிறது. முதல்கட்ட பிரச்சாரத்தில் கனிமொழியின் தூத்துக்குடி, தயாநிதிமாறனின் மத்திய சென்னை இடம்பெறவில்லை.

இன்று தேர்தல் அறிக்கை

மக்களவைத் தேர்தல் மற்றும் 18 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலுக்கு தனித்தனியாக தேர்தல்அறிக்கையை திமுக தயாரித்துள்ளது. இதை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கட்சியின் தலைமைஅலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் இன்று வெளியிடுகிறார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close