[X] Close

‘நான் பிரதமர் வேட்பாளர் இல்லை’ - முலாயம் சிங் யாதவ் திட்டவட்டம்


  • kamadenu
  • Posted: 02 Apr, 2019 08:24 am
  • அ+ அ-

அதிமுக, திமுக தேர்தல் அறிக்கைகள் இன்று வெளியிடப்படுகின்றன.

மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் 30 நாட்களே உள்ள நிலையில் அதிமுக கூட்டணி, திமுக கூட்டணி கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்துவிட்டன. அமமுகவும் முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் பட்டியல் நாளை வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வேட்பாளர்களை அறிவித்த நிலையில் அதிமுகவும், திமுகவும் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்க ஆயத்தமாகி வருகின்றன. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை முதல் பிரச்சாரத்தை தொடங்குகிறார்.

இந்நிலையில், இரு கட்சிகளும் தங்களது தேர்தல் அறிக்கையை இன்று வெளியிடுகின்றன. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று காலை 10.15 மணிக்கு தேர்தல் அறிக்கையை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் கே.பழனிசாமி ஆகியோர் வெளியிடுகின்றனர்.

திமுக அறிக்கை

திமுக தேர்தல் அறிக்கையை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 10 மணிக்கு வெளியிடுகிறார். இரண்டு முக்கிய கட்சிகளும் ஒரே நேரத்தில் தேர்தல் அறிக்கையை வெளியிடுவதால் மக்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close