[X] Close

ஹாட்லீக்ஸ்: உங்கள் பணம் உங்களுக்கே..! காங்கிரஸ் அதிரடி திட்டம்


hotleaks-pchidambaram

ப.சிதம்பரம்

  • kamadenu
  • Posted: 18 Mar, 2019 15:04 pm
  • அ+ அ-

வங்கிக் கணக்குகளில் மினிமம் பேலன்ஸ் பராமரிக்காத வாடிக்கையாளர்களிடம் இருந்து பல ஆயிரம் கோடிகளை அபராதமாக வங்கிகள் வசூலித்திருக்கின்றன. 

கடந்த 5 ஆண்டுகளில் இப்படி வசூலிக்கப்பட்ட தொகை அனைத்தையும் மீண்டும் வாடிக்கையாளர்களிடம் கொடுக்கப்படும் என்ற வாக்குறுதியை காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் சேர்க்கப்போகிறாராம் ப.சிதம்பரம். 

இதை அண்மையில் தேவகோட்டை பொதுக்கூட்டத்தில் வெளிப்படையாகவே அறிவித்த அவர், “சாமானியர்கள் மீது வங்கிகள் விதித்த அபராதத் தொகையை காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் திருப்பிக் கொடுப்போம் என நான் தலைமையைக் கேட்காமலே ஏற்கெனவே அறிவித்துவிட்டேன். 

அதன்பிறகு தலைமையிடம் கேட்டேன். அவர்களும் சம்மதம் தெரிவித்துவிட்டார்கள். 

அதனால்தான் சொல்கிறேன்... உங்களிடம் வசூலிக்கப்பட்ட அபராதத் தொகை உங்களிடமே வந்து சேரும்” என்று சொன்னார் ப.சிதம்பரம்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close