[X] Close

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விசிக, ஐஜேகே வேட்பாளர்கள் அறிவிப்பு


vck-candidates

  • kamadenu
  • Posted: 18 Mar, 2019 09:55 am
  • அ+ அ-

திமுக கூட்டணியில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள், இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

மக்களவைத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 2 தொகுதிகள், இந்திய ஜனநாயக கட்சிக்கு (ஐஜேகே) 1 தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளன.

இதில், விசிக சார்பில் சிதம்பரம் (தனி) தொகுதியில் அக்கட்சித் தலைவர் திருமாவளவன் தனிச் சின்னத்திலும், விழுப்புரம் (தனி) தொகுதியில் விசிக பொதுச் செயலாளர் து.ரவிக்குமார், திமுகவின் உதயசூரியன் சின்னத்திலும் போட்டியிட இருப்பதாக திருமாவளவன் நேற்று அறிவித்தார்.

சிதம்பரத்தில் ஏற்கெனவே தனிச் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருப்பதால், வரும் தேர்தலிலும் தனிச் சின்னத்தில் போட்டியிடுவதாகவும், விழுப்புரம் தொகுதியை எக்காரணம் கொண்டும் இழந்துவிடக் கூடாது என்பதால் ராஜதந்திர நடவடிக்கையாக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட முடிவு செய்திருப்பதாகவும் திருமாவளவன் தெரிவித்தார்.

ஆந்திரா, கேரளாவில்..

மக்களவைத் தேர்தலில் ஆந்திராவில் 6 தொகுதிகள், கேரளாவில் 3 தொகுதிகளில் விசிக தனித்துப் போட்டியிடுகிறது. ஆந்திராவில் குண்டூர் - ஜேக்கப் வித்யாசாகர், சித்தூர் (தனி) - சிவபிரசாத், விசாகப்பட்டினம் - ஜார்ஜ் பங்காரி,திருப்பதி (தனி) - முருகேசன் பிரபு, ராஜம்பேட் - சந்திரசேகரன், கடப்பா - ரமாஜி இம்மானுவேல் ஆகியோரும், கேரளாவில் இடுக்கி(தனி) - எம்.செல்வராஜ், கோட்டயம் - ஜீவன் கே.விஜயன், கொல்லம் - கே.ஆர்.மீனா ஆகியோரும் போட்டியிடுவார்கள் என்று திருமாவளவன் அறிவித்துள்ளார்.

பெரம்பலூரில் பாரிவேந்தர்திமுக கூட்டணியில் ஐஜேகேவுக்கு பெரம்பலூர் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இங்கு ஐஜேகே நிறுவனத் தலைவர் பாரிவேந்தர் போட்டியிடுவார் என்று அவரதுமகனும், அக்கட்சித் தலைவருமான ரவி பச்சமுத்து அறிவித்துள்ளார். உதயசூரியன் சின்னத்தில்பாரிவேந்தர் போட்டியிடுகிறார்.

2014 மக்களவைத் தேர்தலில் பாஜக - தேமுதிக - பாமக - மதிமுககூட்டணியில் பெரம்பலூர் தொகுதியில் பாஜகவின் தாமரை சின்னத்தில் போட்டியிட்ட பாரிவேந்தர் 2.38 லட்சம் வாக்குகள் பெற்று, அதிமுக, திமுகவை தொடர்ந்து 3-வது இடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close