[X] Close

முதல்கட்டமாக 24 மக்களவை தொகுதி, 9 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு அமமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு


ttvdinakaran

அமமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்.

  • kamadenu
  • Posted: 18 Mar, 2019 09:35 am
  • அ+ அ-

மக்களவைத் தேர்தல் மற்றும் 18 தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அமமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் முதல் பட்டியலை அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டார்.

மக்களவைத் தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் (அமமுக), எஸ்டிபிஐ கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளது. இந்நிலையில், முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை சென்னை அசோக் நகரில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் நேற்று வெளியிட்டார்.

அமமுக சார்பில் 24 மக்களவைத் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் விவரம்:

திருவள்ளூர் (தனி) - மாணவர் அணி செயலாளர் பொன்.ராஜா, தென் சென்னை - முன்னாள் அமைச்சர் இசக்கி சுப்பையா, பெரும்புதூர் - அம்மா பேரவை துணைச்செயலாளர் தாம்பரம் நாராயணன், காஞ்சிபுரம் (தனி) - திருப்போரூர் ஒன்றிய செயலாளர்ஏ.முனுசாமி, விழுப்புரம் (தனி) - அமைப்புச் செயலாளர் வானூர் என்.கணபதி, சேலம் - அமைப்புச் செயலாளர் வீரபாண்டி எஸ்.கே. செல்வம் போட்டியிடுகின்றனர்.

நாமக்கல் - மாவட்ட செயலாளர் பி.பி.சாமிநாதன், ஈரோடு - காங்கேயம் நகர செயலாளர் கே.சி.செந்தில்குமார், திருப்பூர் - ஈரோடுபுறநகர் மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.செல்வம், நீலகிரி (தனி) - முன்னாள் ஐஏஎஸ்அதிகாரி எம்.ராமசாமி, கோயம்புத்தூர் - அமைப்புச் செயலாளர் என்.ஆர்.அப்பாதுரை, பொள்ளாச்சி - கோவை புறநகர் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் எஸ்.முத்துக்குமார் போட்டியிடுகின்றனர்.

கரூர் - மாவட்ட செயலாளர் என்.தங்கவேல், திருச்சி - முன்னாள் மேயர் சாருபாலாதொண்டமான், பெரம்பலூர் - திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் எம்.ராஜசேகரன், சிதம்பரம் (தனி) - பெரம்பலூர் மாவட்ட இலக்கிய அணி செயலாளர் ஏ.இளவரசன், மயிலாடுதுறை - நாகை வடக்கு மாவட்ட செயலாளர் எஸ்.செந்தமிழன், நாகப்பட்டினம் (தனி) - தலைமை செயற்குழு உறுப்பினர் டி.செங்கொடி போட்டியிடுகின்றனர்.

தஞ்சாவூர் - பேராசிரியர் பி.முருகேசன், சிவகங்கை - மாவட்ட அம்மா பேரவை செயலாளர் தேர்போகி வி.பாண்டி, மதுரை - எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் கா.டேவிட் அண்ணாதுரை, ராமநாதபுரம் - மாவட்ட செயலாளர் வ.து.ந.ஆனந்த், தென்காசி (தனி) - விருதுநகர் மாவட்ட மகளிர் அணி இணைச் செயலாளர் ஏ.எஸ்.பொன்னுத்தாய், திருநெல்வேலி - புறநகர் தெற்கு மாவட்ட சிறுபான்மையினர் நலப்பிரிவு செயலாளர் ஆர்.ஞான அருள்மணி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

இடைத்தேர்தல் வேட்பாளர்கள்

18 தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் 9 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன் விவரம்:

பூந்தமல்லி (தனி) - திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளர் டி.ஏ.ஏழுமலை, பெரம்பூர் - வடசென்னை வடக்கு மாவட்ட செயலாளர் பி.வெற்றிவேல், திருப்போரூர் - காஞ்சிபுரம் மத்திய மாவட்ட செயலாளர் எம்.கோதண்டபாணி, குடியாத்தம் (தனி) - இளம்பெண்கள் பாசறை செயலாளர் சி.ஜெயந்தி பத்மநாபன், ஆம்பூர் - வேலூர் மேற்கு மாவட்ட செயலாளர் ஆர்.பாலசுப்பிரமணி, அரூர் (தனி) - எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச் செயலாளர் ஆர்.முருகன், மானாமதுரை (தனி) - அம்மா பேரவை செயலாளர் எஸ்.மாரியப்பன் கென்னடி, சாத்தூர் - விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளர் எதிர்கோட்டை எஸ்.ஜி.சுப்பிரமணியன், பரமக்குடி - மருத்துவர் அணி செயலாளர் டாக்டர் எஸ்.முத்தையா போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் 9 பேரும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close