[X] Close

அரக்கோணம் அருகே வாக்கு கேட்க சென்ற பாமக வேட்பாளரை வழிமறித்து பொதுமக்கள் சாலை மறியல்: குடிநீர் வழங்க வலியுறுத்தல்


  • kamadenu
  • Posted: 01 Apr, 2019 09:37 am
  • அ+ அ-

72 வயதைத் தொட்டுவிட்ட சோனியா காந்தி இம்முறை தனது ராய்பரேலி தொகுதியில் தனக்குப் பதிலாக மகள் பிரியங்காவை நிறுத்துவார் எனப் பரவலான பேச்சு இருந்தது.

 ஆனால், ராகுலிடம் கட்சிப் பொறுப்பை முழுமையாகத் தந்துவிட்டு ஆலோசகராக மட்டும் தொடரலாம் என நினைத்துக்கொண்டிருந்த சோனியா, மீண்டும் தனது ராய்பரேலி தொகுதியில் போட்டியிடத் தயாராகி விட்டார். 

காந்தி குடும்பத்தின் பாரம்பரியத் தொகுதியாக இருக்கும் ராய்பரேலியைத் தக்கவைக்க நினைக்கும் சோனியா, தேர்தலுக்குப் பிறகு எதிர்க்கட்சிகள் பலம்பெற்று ராகுலைப் பிரதமராக ஏற்க மறுத்தால், தானே பிரதமர் வேட்பாளராகக் களமிறங்கவும் அவர் இந்த முடிவை எடுத்திருப்பதாகச் சொல்கிறார்கள். 

சோனியா பிரதமர் பதவி ஏற்கத் தடையாக இருந்த வெளிநாட்டவர் விவகாரம் தொடர்பான வழக்கும் உச்ச நீதிமன்றத்தில் விரைவில் முடிவுக்கு வரவிருப்பது குறிப்பிடத்தக்கது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close