[X] Close

திமுகவால் எந்தத் தேர்தலிலும் வெற்றி பெற முடியாது: கடலூரில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேச்சு


  • kamadenu
  • Posted: 01 Apr, 2019 09:27 am
  • அ+ அ-

‘‘கட்சித் தொண்டர்கள், நிர்வாகிகள் வலியுறுத்துவதால் தேனி தொகுதி யில் நானேகூட போட்டியிடலாம்’’ என்று அமமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார்.

சென்னையில் செய்தியாளர்களி டம் அவர் நேற்று கூறியதாவது:

கடந்த 3 மாதங்களாக கட்சி நிர் வாகிகளுடன் ஆலோசித்து வேட் பாளர் பட்டியல் வெளியிடப்பட் டுள்ளது. அனைவரும் நிச்சயம் வெற்றி பெறுவார்கள். தேர்தல் அறிக்கை வரும் 22-ம் தேதி வெளியிடப்படும். தமிழக மக்களின் அனைத்து பிரச்சினைகளும் அதில் வெளிப்படும்.

ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தல் வெற்றிக்குப் பிறகு குக்கர் சின்னம் தமிழகம் முழுவதும் உள்ள கட்சியினர் மற்றும் பொதுமக்கள் பெரிதும் எதிர்பார்க்கும் சின்னமாக உருவாகியிருக்கிறது. தற்போது அந்த சின்னம் கிடைத்தால் மகிழ்ச்சி. குக்கர் சின்னம் கிடைக் கும் என்ற நம்பிக்கை இருக்கி றது. இரண்டாம்கட்ட வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியிடப் படும்.

அதிமுக - பாஜக கூட்டணி அறி விக்கப்பட்ட அன்றே அது தோல்வி யுற்ற கூட்டணி ஆகிவிட்டது. தமி ழகத்தின் அனைத்துப் பகுதிகளி லும் எங்களுக்கு ஆதரவு உள்ளது. தேர்தல் முடிவுக்குப் பிறகு இது தெரியும். பண மூட்டை வைத்திருப்பவர்கள்தான் தேர்தலில் வெற்றி பெற முடியும் என்றால், 40 தொழிலதிபர்களைப் போட்டால் வெற்றி பெற்றுவிடுவர். தேனி எனது பழைய தொகுதி. ஜெயலலிதா என்னை அறிமுகம் செய்துவைத்த தொகுதி. அதனால் நானேகூட அங்கு போட்டியிடலாம். கட்சியினரும், நிர்வாகிகளும் அதையே வலியுறுத்தி வருகின் றனர்.

எம்ஜிஆர், ஜெயலலிதா தலை மையில் இயங்கிய அதிமுகவை வைத்திருப்பவர்கள் இன்று விடுதி, வீடு என்று போய் பேசி கூட்டணி அமைத்துள்ளனர். இதுபோன்ற செயலை நான் கேள்விப்பட்டதுகூட கிடையாது.

கடந்த 2014-ம் ஆண்டு தேர்தல், தமிழக மக்கள் எந்த திசையை நோக்கி பயணிக்கிறார்கள் என் பதைக் காட்டியது. அப்போது ஜெயலலிதா பிரதமர் வேட்பாளர் யார் என்று சொல்லி வாக்கு கேட்கவில்லை. தமிழக நலனை தேசிய கட்சிகள் பாதுகாக்க வில்லை. அதனால் தமிழக நலனை சமரசம் இல்லாமல் யார் பாதுகாப் பார்கள் என்று நம்புகிறார்களோ அவர்களுக்கே மக்கள் வாக்களிப் பர். இவ்வாறு அவர் கூறினார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close