[X] Close

வங்கிக் கணக்கு விவரம் கேட்கும் திமுக, அதிமுக: மகளிர் சுயஉதவி குழுக்களை பிரச்சாரத்தில் ஈடுபடுத்த திட்டம் - உறுப்பினர் எண்ணிக்கைக்கு ஏற்ப கமிஷன்


admk-dmk

கோப்புப் படம்

  • kamadenu
  • Posted: 18 Mar, 2019 07:34 am
  • அ+ அ-

மானாமதுரை சட்டப்பேரவை இடைத் தேர்தலில் வெற்றிபெற அதிமுக, திமுக நிர்வாகிகள் மகளிர் சுயஉதவிக்குழு தலைவர்களை நாடி வருகின்றனர். உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கமிஷன் தருவதாக, அக்கட்சியினர் கூறியதால் மகளிர் குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.

மக்களவைத் தேர்தலோடு, 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதில் 6 தொகுதிகளிலாவது வெற்றி பெற்றால் மட்டுமே அதிமுக ஆட்சியை தக்கவைக்க முடியும். இதனால் அதிமுக, மக்களவைத் தேர்தலைவிட இடைத்தேர்தலுக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்து வரு கிறது.

அதேபோல, இடைத்தேர்தலில் வெற்றிபெற்று அதிமுக ஆட்சியை எப்படியாவது கவிழ்த்துவிட வேண்டும் என திமுக, அமமுக கட்சியினரும் முழு மூச்சாக செயல்பட்டு வருகின்றனர். மானாமதுரை இடைத்தேர்தலில் வெற்றி பெற மகளிர் சுயஉதவிக் குழுவினருக்கு பணப் பட்டுவாடா செய்யவும், அவர் களைப் பிரச்சாரத்தில் ஈடுபடுத்தவும் அதிமுக, திமுக நிர்வாகிகள் திட்டமிட் டுள்ளனர்.

பம்பரமாய் சுழன்று...

இதற்காக மகளிர் சுயஉதவிக் குழுத் தலைவர்கள், உறுப்பினர்களின் வங்கி சேமிப்பு கணக்குகளைப் பெற்று வருகின்றனர். மேலும் உறுப்பினர் களின் எண்ணிக்கைக்கு ஏற்ப தாராள மாக கமிஷன் தருவதாகக் கட்சியினர் உறுதி கூறியதால் மகளிர் குழு தலைவிகள் தொகுதிக்குள் பம்பரமாகச் சுழன்று வருகின்றனர். சிலர் இரண்டு கட்சிகளிடமும் மகளிர் குழு உறுப்பினர்கள் பட்டியலைக் கொடுத்துள்ளனர்.

மானாமதுரை தொகுதியில் நடக்கும் இந்த விதிமீறல்களைத் தேர்தல் அதிகாரிகள் கண்டும், காணாமல் இருப்பதாக புகார் எழுந்துள்ளது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close