[X] Close

ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத்தொகுதி


  • kamadenu
  • Posted: 31 Mar, 2019 10:58 am
  • அ+ அ-

அதிமுக கூட்டணியில், சென்னை யில் உள்ள 3 மக்களவை தொகுதி களில் வடசென்னையை தேமுதிக வுக்கும், மத்திய சென்னையை பாமக வுக்கும் ஒதுக்கிவிட்டு, தென் சென்னையில் மட்டும் அதிமுக களம் காண்கிறது.

சென்னையை பொறுத்தவரை கடந்த காலங்களில், அது திமுகவின் கோட்டையாகவே இருந்து வந்துள் ளது. சென்னையில் உள்ள 3 மக்க ளவை மற்றும் 16 சட்டப்பேரவை தொகுதிகளில், திமுக வெற்றி பெற்று வந்தது. முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் காலத்திலேயேகூட, தமிழகத்தில் அதிக இடங்களை கைப்பற்றிய அதிமுக, சென்னையில் சொற்பமான இடங்களை மட்டுமே வெல்ல முடிந்தது. பின்னர் ஜெய லலிதாவின் காலத்திலும், சென்னை யில் ஆர்.கே.நகர் போன்ற ஒரு சில தொகுதிகளைத் தவிர மற்ற தொகுதிகளை கூட்டணி கட்சி களுக்கு அதிமுக ஒதுக்கிவிடுவது வழக்கம்.

ஆனால், கடந்த 2011-ம் ஆண்டு நிலைமை மாறியது. முந்தைய தேர்தல்களில் சென்னையில் ஏதே னும் ஒரு தொகுதியில் போட்டியிட்டு தொடர்ந்து வெற்றிவாகை சூடிய திமுக தலைவர் மறைந்த மு.கருணாநிதிகூட, 2011-ம் ஆண்டு தேர்தலில் திருவாரூருக்கு மாறினார்.

2011-ம் ஆண்டு தேர்தலில் திமுக வின் கோட்டையாக இருந்த சென்னை யில் அதிமுக, 16 சட்டப்பேரவை தொகுதிகளில் 14 தொகுதிகளை கைப்பற்றியது. அதைத் தொடர்ந்து நடந்த, 2014- மக்களவை தேர்தலில் அதிமுக தனித்து நின்றபோது, சென்னையின் 3 மக்களவை தொகுதி களிலும் தனது வேட்பாளரை நிறுத்தி வெற்றி பெற்றது.

ஆனால் இந்த மக்களவை தேர்த லில், தென்சென்னையை மட்டும் வைத்துக் கொண்டு, மற்ற தொகுதி களை கூட்டணி கட்சிகளுக்கு அதிமுக தாரை வார்க்கிறது.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்

கடந்த சட்டப்பேரவை தேர்த லில் சென்னையில் 16 தொகுதி களில், 10 தொகுதிகளை திமுக கைப்பற்றியது. 6 தொகுதிகளை மட்டுமே அதிமுகவால் வெல்ல முடிந்தது. அதன்பின், ஜெயலலிதா வின் மறைவால் ஆர்.கே.நகர் தொகுதியில் நடந்த இடைத்தேர் தலிலும் ஆளுங்கட்சியான அதிமுக வெற்றி பெற முடியவில்லை.

இதை கருத்தில் கொண்டே, இம்முறை, சென்னையில் போட்டியிட தயங்கும் அதிமுக மத்திய சென்னை, வடசென்னையில் போட்டியிடாமல், கூட்டணி கட்சிகளுக்கு அளிக்கிறது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close