[X] Close

காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி


  • kamadenu
  • Posted: 31 Mar, 2019 10:59 am
  • அ+ அ-

மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், பிஹாரில் தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு ஆகியவற்றில் அரசியல் கட்சிகள் மும்முரம் காட்டி வருகின்றன. இந்த சூழ்நிலையில், சில அரசியல்வாதிகள், தங்கள் மனைவிகளுக்கு சீட் வழங்கக் கோரி கட்சிகளுக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றனர்.

அவர்களில் முக்கியமானவர் ஆனந்த் மோகன். ரவுடியாக இருந்து அரசியலுக்கு வந்த இவர், பிஹார் மக்கள் கட்சியை தொடங்கினார். பின்னர், அதை கலைத்துவிட்டு காங்கிரஸில் சில காலங்கள் பணியாற்றினார்.

தற்போது கொலை வழக்கு ஒன்றில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆனந்த் மோகன், தனது மனைவி லவ்லிக்கு, ஷியோகர் தொகுதியை ஒதுக்குமாறு ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைமையி லான மகா கூட்டணியை வலியுறுத்தி வருகிறார். அவ்வாறு தனது மனைவிக்கு சீட் கிடைக்கவில்லை என்றால், மிகப்பெரிய விளைவுகளை சந்திக்க நேரிடும் என பகிரங்கமாகவே மிரட்டல் விடுத்திருக்கிறார்.

இவரை போலவே, ரவுடிகளாக இருந்து அரசியல்வாதிகளாக மாறிய அனந்த் சிங், சூரஜ் சிங், ராஜேஷ் கன்னா, பப்பு யாதவ் ஆகியோரும் தங்கள் மனைவிகளுக்கு சீட் வழங்குமாறு சம்பந்தப்பட்ட கட்சிகளை வலியுறுத்தி வருகின்றனர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close