"> "> ">
[X] Close

March 30, 2019


march-30-2019

  • kamadenu
  • Posted: 30 Mar, 2019 09:52 am
  • அ+ அ-

திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்ட 9 தொகுதிகளில் போட்டியிட கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு திருவள்ளூர் (தனி), கிருஷ்ணகிரி, ஆரணி, கரூர், திருச்சி, சிவகங்கை, தேனி, விருதுநகர், கன்னியாகுமரி ஆகிய 9 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் கார்த்தி சிதம்பரம் – சிவகங்கை, அகில இந்தியச் செயலாளர் மாணிக் தாகூர் – விருதுநகர், தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் சு.திருநாவுக்கரசர் – திருச்சி,மகளிர் காங்கிரஸ் முன்னாள் பொதுச்செயலாளர் ஜோதிமணி – கரூர், முன்னாள் எம்.பி. ஜே.எம்.ஆருண் - தேனி போட்டியிடுவது உறுதியாகியுள்ளதாக கூறப்படுகிறது.

ஈவிகேஎஸ் இளங்கோவன் ஈரோடு தொகுதியில் போட்டியிட விரும்பினார். அத்தொகுதி மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டதால் திண்டுக்கல் தொகுதியை கேட்டார். அதை விட்டுத்தர திமுக மறுத்துவிட்டது. இதனால் கிருஷ்ணகிரி தொகுதியில் போட்டியிட இளங்கோவன் முயற்சித்து வருகிறார். இளங்கோவன், ஏற்கெனவே 1996-ல்கிருஷ்ணகிரியில் போட்டியிட்டுள்ளார். 2014 தேர்தலில் கிருஷ்ணகிரியில் போட்டியிட்ட காங்கிரஸ்அகில இந்தியச் செயலாளர் ஏ.செல்லக்குமாரும் கிருஷ்ணகிரியில் போட்டியிட முயற்சிக்கிறார்.

2014 தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் செயல் தலைவர் எச்.வசந்தகுமார் 2.44 லட்சம் வாக்குகள் பெற்றார். இதனால் மீண்டும் அத்தொகுதியை அவர் கேட்டு வருகிறார். ஆனால், காஞ்சிபுரம் வடக்கு மாவட்டத் தலைவர் ரூபி மனோகரன், கன்னியாகுமரி மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி ராபர்ட் புரூஸ் ஆகியோரும் கன்னியாகுமரியில் போட்டியிட முயற்சித்து வருகின்றனர்.

ஆரணி தொகுதியில் போட்டியிட்ட செயல் தலைவர் விஷ்ணுபிரசாத், மாநிலப் பொருளாளர் நாசே ராமச்சந்திரன், திருவள்ளூர் தொகுதியில் போட்டியிட மாநில எஸ்.சி. பிரிவுத் தலைவர் கு.செல்வப்பெருந்தகை, செயல் தலைவர் ஜெயக்குமார் ஆகியோர் முயற்சித்து வருவதாகக் கூறப்படுகிறது. ஒரு தொகுதிக்கு பலர் போட்டியிடுவதால் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் தாமதமாகும் என்கிறது கட்சி வட்டாரம்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close