[X] Close

தேர்தல் பணிகள் குறித்து ஆலோசிக்க நாளை அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்


admk-office

  • kamadenu
  • Posted: 16 Mar, 2019 09:32 am
  • அ+ அ-

மக்களவை தேர்தல் மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தல் பணிகள் குறித்து ஆலோசிக்க அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை நடைபெறுகிறது.

தமிழகத்தில் மக்களவை மற்றும் காலியாக உள்ள 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஏப்ரல் 18-ம்தேதி நடக்கிறது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் வரும் 19-ம்தேதி முதல் தொடங்குகிறது. தமிழகத்தில் அதிமுக தலைமையில் பாஜக, பாமக, தேமுதிக, தமாகா, என்.ஆர்.காங்கிரஸ், புதியதமிழகம், புதிய நீதிக்கட்சி ஆகியகட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. இதில் அதிமுக 20 தொகுதிகளிலும், மற்ற கட்சிகள் 20 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.

கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் குறித்த பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. திமுக கூட்டணியில் தொகுதிகள் அறிவித்துள்ள நிலையில், அதிமுகவிலும் தொகுதிகள் குறித்த இறுதிப் பட்டியல் நாளைவெளியாகலாம் என்று எதிர்பார்க் கப்படுகிறது.

கடந்த 2014-ம் ஆண்டு மக்க ளவை தேர்தலில் அதிமுக தனியாகப் போட்டியிட்டு, 37 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஆனால் தற்போது, 20 தொகுதிகள் தவிர, மற்ற தொகுதிகளில் கூட்டணி கட்சிகள் போட்டியிடுகின்றன. இதனால் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் அதிருப்தியில் உள்ளதாகக் கூறப்படுகிறது.

 இந்நிலையில், கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் குறித்தும், அந்தத் தொகுதிகளில் தேர்தல் பணியாற்றுவது தொடர்பாகவும் மாவட்டச் செய லாளர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்க அதிமுக தலைமை முடிவெடுத்துள்ளது. அதிமுக தலைமை அலுவலகத்தில், அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில், ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் முதல்வர் கே.பழனிசாமி ஆகியோர் முன்னிலையில், மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை (17-ம் தேதி) நடக்கிறது. இக்கூட்டத்தில் அனைத்து மாவட்டச் செயலாளர்கள், பல்வேறு அணிகளின் செயலாளர்கள் தவ றாமல் பங்கேற்க வேண்டும் என்று அதிமுக தலைமை அறி வுறுத்தியுள்ளது.

மேலும் இக்கூட்டத்தில், தேர்தல் அறிக்கை வெளியிடப்பட வாய்ப்புள்ளதாகவும் அதிமுக வட்டாரங்கள் தெரிவித்தன.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close