[X] Close

இரண்டு ஆண்டுகளில் மூன்று பிரதமர்கள்


  • kamadenu
  • Posted: 30 Mar, 2019 08:46 am
  • அ+ அ-

மக்களவைத் தேர்தலில் கண்ணி யத்துடன் பிரச்சாரம் செய்யுமாறு காங்கிரஸ் கட்சி பேச்சாளர்களை, அக்கட்சியின் தேர்தல் குழு ஒருங்கிணைப்பாளர் குஷ்பு அறிவுறுத்தியுள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் பிரச்சாரக் குழு கூட்டம் சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தை மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தொடங்கி வைத்தார். பிரச்சாரக் குழுவின் தலைவர் சு.திருநாவுக்கரசர் தலைமை வகித்தார்.

இக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய காங்கிரஸ் பேச்சாளர்கள், ‘‘மன்மோகன்சிங் தலைமையிலான 10 ஆண்டுகால மத்திய ஆட்சி குறித்து மக்களுக்கு தெரிவிக்காத தால்தான் 2014-ம் ஆண்டு நடை பெற்ற மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தோற்றது. சாதனை களைச் சொல்ல கட்சி எங்களுக்கு வாய்ப்பளிக்கவில்லை. வேட்பாளர் கள் யாரும் பேச்சாளர்களை மதிப்பதில்லை. பெண்களுக்கு மேடையில் பேச வாய்ப்பளிப்ப தில்லை. இந்தப் பிரச்சாரக் குழு வில் பேச்சாளர்கள் எண்ணிக்கை குறைவு. தலைவர்கள்தான் அதி கம்’’ என்று தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

பேச்சாளர்களுக்கு முக்கிய பங்கு

அதைத்தொடர்ந்து கட்சியின் தேர்தல் குழு ஒருங்கிணைப்பாளர் குஷ்பு பேசியதாவது:

காங்கிரஸ் கட்சி வளர்ந்ததில் பேச்சாளர்களுக்கு முக்கியப் பங்கு உண்டு. உங்களுக்கு சில வருத்தங்கள் இருக்கும். அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

காங்கிரஸின் தலைவியாக 19 ஆண்டுகள் சோனியாகாந்தி இருந்துள்ளார். இந்திரா காந்தியும் கட்சியை வழிநடத்தி வந்துள்ளார். இன்று கட்சியில் பல்வேறு பொறுப்புகளில் பெண்கள் உள்ளனர். அதனால் பிரச்சாரத்தில் மாற்றுக் கட்சி பெண் தலைவர்களைப் பற்றி கண்ணியக் குறைவாகப் பேசக்கூடாது.

முக்கியமாக, பாஜகவின் தவறு களையும், காங்கிரஸ் கட்சி செய்ய இருப்பது குறித்தும் பிரச்சாரத்தில் எடுத்துரைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

மன்னிப்பு கேட்க வேண்டும்

பின்னர் அவர் செய்தியாளர் களிடம் கூறும்போது, ‘‘பாலியல் வழக்கு தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில், பாலியல் விவகாரம் தொடர்பாக புகார் அளித்தோரின் விவரங்கள் வெளியிட்டிருப்பது உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது. பாலியல் தொடர்பாக யாராவது புகார் கொடுத்தால், அவர்களின் விவரங்கள் வெளியிடப்படும் என்கிற அச்சத்தை உருவாக்கவே, பாதிக்கப்பட்ட பெண்களின் விவரங்கள் வெளியிடப்படுகின்றன. இந்த விவகாரத்தில் அரசும், காவல்துறையும் மன்னிப்பு கேட்க வேண்டும்’’ என்றார்.

இக் கூட்டத்தில் காங்கிரஸ் செயல் தலைவர் வசந்தகுமார், மாநில மகிளா காங்கிரஸ் தலை வர் ஜான்சிராணி, தேசிய பொதுச் செயலர் அப்சரா ரெட்டி, தேர்தல் ஒருங்கிணைப்புக் குழு துணைத் தலைவர் ஜே.எம்.ஆரூண், முன்னாள் எம்பி பெ.விஸ்வநாதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close