[X] Close
 

தொகுதிக்கு வராததற்கு அமைச்சரே காரணம்: நடிகர் கருணாஸ் எம்எல்ஏ குற்றச்சாட்டு


karunas-accusing-minister

  • kamadenu
  • Posted: 24 Apr, 2018 11:12 am
  • அ+ அ-

அமைச்சர் மணிகண்டனின் நடவடிக்கையால் தொகுதி பக்கம் வருவதில்லை என திருவாடானை தொகுதி எம்எல்ஏ நடிகர் கருணாஸ் தெரிவித்தார்.

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அவர் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: எனது தொகுதி குறைகள் தொடர்பாக 189 மனுக்கள் கொடுத்துள்ளேன். இதில் 3 மனுக்கள் மட்டுமே தீர்க்கப்பட்டுள்ளன. இதுகுறித்து முதல்வரிடம் கோரிக்கை விடுத்தும் அதிகாரிகள் நடவடிக்கையில் மாற்றம் இல்லை.

எனது 2 ஆண்டுகால தொகுதி வளர்ச்சி நிதியை முறையாகச் செலவிட்டுள்ளேன். எனது வளர்ச்சி நிதி பணி ஒப்பந்தத்தில் வேறு நபர் (அமைச்சர்) தலையிடுகிறார். எனது தொகுதியில் மணல் கொள்ளையை தடுக்கவில்லை. எனக்கு இங்கு பாதுகாப்பு இல்லை. நான் ஒரு சமுதாய அமைப்பைச் சேர்ந்தவன். நான் ஓட்டுக்கேட்க வந்தபோது, பல இடங்களில் ஊருக்குள் வர தடைவிதித்தனர். நான் தொகுதிக்குள் வரும்போது கல் வீசுகின்றனர். இதன் மூலம் ஜாதிக் கலவரத்தை தூண்ட நினைக்கின்றனர். அதற்கு நான் அனுமதிக்க மாட்டேன். 

எனது அலுவலகம் திருவாடானையிலும், எம்எல்ஏ விடுதியிலும் 24 மணி நேரமும் செயல்படுகிறது.உள்ளூர் அமைச்சர் மணிகண்டனின் நடவடிக்கையால் தான் தொகுதி பக்கம் வருவதில்லை. 

மேலும் தென்கொரியா தொழில்நுட்பத்தில் ஆழ்துளை கிணறு அமைத்து, எனது தொகுதியில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க முயற்சித்து வருகிறேன். ஒரு கிணறு அமைக்க ரூ. 60 லட்சம் வரை செலவாகும். இதன் மூலம் குடிக்க உகந்த தண்ணீர் எடுக்கப்பட்டு மக்களுக்கு வழங்கப்படும். முதற்கட்டமாக எனது தொகுதியில் நிறைவேற்ற முயற்சித்துள்ளேன். தமிழகம் முழுவதும் இத்திட்டத்தை செயல்படுத்தினால் அதன் திட்ட மதிப்பீடு குறையும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்




Kalathin Vasanai - Kindle Edition


m7

d7

[X] Close