[X] Close

‘நான்தான் பெரம்பலூர் வேட்பாளர்’- ஆதரவு திரட்டிய பாரிவேந்தர்


parivendhar

  • கா.சு.வேலாயுதன்
  • Posted: 15 Mar, 2019 09:30 am
  • அ+ அ-

திமுக கூட்டணியில் இந்திய ஜனநாயக கட்சிக்கு, ஒரு மக்களவை தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. எந்த தொகுதி என்பது முடிவாகவில்லை. இந்நிலையில், அக்கட்சியின் நிறுவனர் பாரிவேந்தர், பெரம்பலூர் தொகுதியில் நேற்று முக்கியப் பிரமுகர்களிடம் ஆதரவு திரட்டினார்.

தனலட்சுமி சீனிவாசன் குழுமத் தலைவர் சீனிவாசன், ரோவர் கல்வி குழுமத் தலைவர் வரதராஜன் உள்ளிட்டோரிடம் ஆதரவு திரட்டினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர்கூறியபோது, ‘‘நான்தான் பெரம்பலூர் தொகுதி வேட்பாளர். நான் வெற்றிபெற்றால் விவசாய விளைபொருட்களை விற்பனை செய்ய வசதியாக இலவச குளிர்சாதன வேன் இயக்கப்படும். பின்தங்கிய 300 மாணவர்களை தேர்ந்தெடுத்து இலவசக் கல்வி வழங்கப்படும். வேலையில்லா இளைஞர்கள் 500 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும். பெரம்பலூர் மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான ரயில்பாதை திட்டத்தை கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close