[X] Close

சாலை வசதிக்கு நிதின் கட்கரியை பாராட்டிய சு.சுவாமி; கிண்டலடித்த மாணிக்கம் தாகூர்


  • kamadenu
  • Posted: 29 Mar, 2019 12:07 pm
  • அ+ அ-

தஞ்சாவூர் தொகுதியில் தனி சின்னத்தில் போட்டியிட உள்ளதாக தமாகா தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தமாகா அலுவலகத்தில் ஜி.கே.வாசன் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

அதிமுக தலைமையில் அமைந் துள்ள வெற்றிக் கூட்டணியை திமுக, காங்கிரஸ் கூட்டணியால் ஜீரணிக்க முடியவில்லை. அதனால் தான் இந்த கூட்டணி பற்றி அவதூறாக பேசி வருகிறார்கள். நாங்கள் இணைந்துள்ள கூட்டணி சாதி, மதம், இனம், மொழி ஒற்றுமைக்கும் பாதுகாப்புக்கும் முன்னுரிமை கொடுக்கும் கூட்ட ணியாக செயல்படும். தமிழக மக்கள் மட்டுமின்றி, இந்திய மக்களின் மனநிலை. அரசியல் சூழல், தேசத்தின் ஒற்றுமை, பாதுகாப்பு, நாட்டின் நலன், காங்கிரஸின் நிலையற்ற அரசியல் காரணமாக நல்ல முடிவை தமாகா எடுத்துள்ளது.

ஒட்டுமொத்த தமிழக மக்களின் உணர்வு, தொண்டர்கள், தலை வர்களின் கருத்தை கேட்டுத்தான் இந்த முடிவை எடுத்துள்ளோம். தற்போதைய கூட்டணியை எண்ணிக்கை அடிப்படையில் அல்லாமல் நல்லெண்ண அடிப்படையில் எடுத்துள்ளோம். மக்களவை தேர் தல் தொடங்கி பஞ்சாயத்து தேர்தல் வரை இந்த கூட்டணி வெற்றிபெறும். அதிமுக தலைமையிலான கூட்டணியில் தமாகா செயல்படுகிறது. அந்த கூட்டணியில் ஒரு கட்சியாக பாஜக செயல்படுகிறது.

மோடி ஆட்சியை பொறுத்தவரை குறைகளை நிறையாக்கும் ஆட்சியாக செயல்பட்டு வருகிறது. அதிமுக கூட்டணி வெற்றிக்காக 39 தொகுதிகளுக்கும் செல்லவுள்ளேன். அதிகாரப்பூர் வமாக தஞ்சாவூர் தொகுதியை அறிவித் துள்ளார்கள். நாங்கள் கேட்ட தொகுதியையே எங்களுக்குகொடுத்துள்ளார்கள். அதிமுகசின்னத்தில் தமாகா நிற்கவில்லை.

சைக்கிள் சின்னத்தை பொறுத்தவரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு போட்டு வெற்றி பெற்றுள்ளோம். தேர்தல் ஆணையம் 8 வாரத்துக்குள் தமாகாவின் மனுவை பரிசீலித்து முடிவு எடுக்க வேண்டும் என்றுஉத்தரவிட்டுள்ளது. விசாரணை யின் முடிவில் சைக்கிள் சின்னம்கிடைத்தால் சைக்கிளில் போட்டியிடுவோம். கிடைக்கவில்லைஎன்றால் வேறு சின்னத்தை தேர்ந்தெடுத்து போட்டியிடுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்

பிரதமர் வேட்பாளர்

உங்களை பொறுத்தவரை சிறந்த பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்தியா அல்லது நரேந்திர மோடியா என்று வாசனிடம் செய்தி யாளர்கள் கேள்வி எழுப்பினர். ஆனால், அந்த கேள்விக்கு பதில ளிக்காமல் வாசன் தவிர்த்தார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close