[X] Close

கோவை சிறுமி கொலை: ட்விட்டரில் குஷ்பு காட்டம்


  • kamadenu
  • Posted: 29 Mar, 2019 11:18 am
  • அ+ அ-

மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தெரிவித்து, ராகுல்காந்தியை பிரதமராக்குவோம் என மனிதநேய ஜனநாயக கட்சி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

மனிதநேய ஜனநாயக கட்சி 6-வது தலைமை செயற்குழு கூட்டம் சென்னை திருவல்லிக்கேணியில், அவைத் தலைவர் எஸ்.எஸ்.நாசர் உமரி தலைமையில் நேற்று நடைபெற்றது. பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி, மாநிலப் பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரஷிது உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். தேர்தல் களப்பணிகள் குறித்து மாவட்டச் செயலாளர்களிடம் கருத்தாய்வு நடத்தப்பட்டது.

கூட்டத்தில், “மக்களவைத் தேர்தலில் பாசிசம் ஒழிக்கப்பட்டு சமூகநீதி நிலை நாட்டப்பட காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்குவாக்களிக்கும்படி இந்திய மக்கள் அனைவரையும் இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது.

தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், விசிக மதிமுக, முஸ்லீம் லீக்மற்றும் இதர கூட்டணிக் கட்சிகளின் வெற்றிக்கு பாடுபடுவது சமூக ஆர்வலர் முகிலனைக் கண்டுபிடித்து ஒப்படைக்க வேண்டும், பாலியல் கும்பல் மீது கடும் நடவடிக்கை தேவை, 28 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் வாடும் பேரறிவாளன் உள்ளிட்டவர்களையும், கோவை அபுதாஹிர், திண்டுக்கல் மீரான் மைதீன்போன்றவர்களை விடுதலை செய்யவேண்டும்” போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close