[X] Close

ஓபிஎஸ் மகனை கரையேற்ற தேனியில் முழுவீச்சில் களமிறங்கிய அமைச்சர் உதயகுமார்: மதுரை, விருதுநகரிலும் தலைகாட்டுவாரா?


  • kamadenu
  • Posted: 29 Mar, 2019 06:21 am
  • அ+ அ-

மக்களவைத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதன்படி, கள்ளக்குறிச்சி, திருச்சி, விருதுநகர், வடசென்னை அல்லது நாகப்பட்டினம் தொகுதியில் அக்கட்சி போட்டியிடலாம் என்று கூறப்படுகிறது.

இதற்கிடையே, மக்களவைத் தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிட விருப்ப மனு செய்திருப்பவர்களிடம் கோயம்பேட்டில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் விஜயகாந்த் முன்னிலையில் நேற்று நேர்காணல் நடந்தது. இதில் வேட்பாளர்களின் விபரங்கள், கட்சியில் ஆற்றிய பணி, தொகுதியில் எவ்வளவு செலவு செய்ய முடியும், தொகுதிகள் தொடர்பான அடிப்படை தகவல்கள் ஆகியவை கேட்கப்பட்டன. 4 தொகுதிகளுக்கு மொத்தம் 400 பேரிடம் நேர்காணல் நடத்தப்பட்டுள்ளதாக தேமுதிக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நேர்காணலின்போது தேமுதிக அவைத்தலைவர் வி.இளங்கோவன், கொள்கை பரப்புச் செயலாளர் அழகாபுரம்.ஆர்.மோகன்ராஜ், துணை செயலாளர்கள் எல்.கே.சுதீஷ், ப.பார்த்தசாரதி, ஏ.எஸ்.அக்பர் உள்ளிட்டோர் உடனிருந்தனர். இன்னும் 3 நாட்களில் 4 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பெயர் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close