[X] Close
 

ஈபிஎஸ் சாதனை குறித்த விளம்பரப் படம்: தயாரிப்பாளர் சஷிகாந்த் கிண்டல் 


edapadi-palanisamy-advt

சஷிகாந்த் | கோப்புப் படம்.

  • kamadenu
  • Posted: 21 Apr, 2018 14:36 pm
  • அ+ அ-

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசின் ஓராண்டு சாதனை குறித்து செய்தி மற்றும் விளம்பரத்துறை சார்பில் ஒரு விளம்பரப் படம் திரையரங்குகளில் திரையிடப்படுகிறது. இதை தயாரிப்பாளர் சஷிகாந்த் கிண்டலாக விமர்சித்துள்ளார். 

கடந்த 47 நாட்களாகத் திரையுலகினர் நடத்திய போராட்டம் முடிவுக்கு வந்த நிலையில், நேற்று முதல் புதுப்படங்கள் ரிலீஸ் ஆகின. புதுப்படங்கள் வெளியாவதால் ரசிகர்கள் திரையரங்குகளுக்கு வரத் தொடங்கி இருக்கின்றனர். 

திரையரங்குகளில் படம் திரையிடப்படுவதற்கு முன்பு சில விளம்பரங்களைத் திரையிடுவது வழக்கம். அதன்படி, தமிழக அரசின் சார்பில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசின் ஓராண்டு சாதனை குறித்த ஒரு விளம்பரப் படம் திரையிடப்பட்டது. அதில் மாற்றுத்திறனாளி ஒருவர் கோயில் அர்ச்சர்கரிடம் 'சாமிக்கு அர்ச்சனை செய்யுங்கள்' என்று சொல்கிறார். அதற்கு அர்ச்சகர், 'எந்த சாமிக்கு?' எனக் கேள்வி எழுப்புகிறார். அதற்கு அந்தப் பெண், 'நம்ம எடப்பாடி
பழனிசாமிக்கு' என்று பதில் அளிக்கிறார்.

இந்த விளம்பரப் படம் குறித்து சினிமா தயாரிப்பாளர் சஷிகாந்த் தன் ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டு, ''வாவ்...  மிகவும் நல்லது. வரி செலுத்துபவர்களின் பணம்   அரசாங்காத்தால் எப்படி செலவழிக்கப்படுகிறது பாருங்கள். நீண்ட நாள் கழித்து திரையரங்கம் வரும் மக்களுக்கு நல்ல 'அர்ச்சனை'யும், 'சாமி' தரிசனமும் கிடைத்தது'' என்று தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

 
 




Kalathin Vasanai - Kindle Edition


d7

[X] Close