[X] Close

‘அனைத்து தொகுதிகளிலும் விஜயகாந்த் பிரச்சாரம் செய்வார்’


vijayakanth-son

  • kamadenu
  • Posted: 11 Mar, 2019 08:31 am
  • அ+ அ-

வரும் மக்களவைத் தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேரடியாக பிரச்சாரம் செய் வார் என அவரது மகன் விஜய பிரபாகரன் தெரிவித்தார்.

பெரம்பலூர் மாவட்ட தேமுதிக சார்பில் குன்னம் அருகே உள்ள செங்குணம், சிறுகுடல், கீழப்புலியூர், பீல் வாடி, எழுமூர், சித்தளி ஆகிய கிராமங்களில் கட்சிக் கொடி யேற்று விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் கட்சி பிரமுகர் இல்ல காதணி விழா ஆகிய நிகழ்ச் சிகள் நேற்று நடைபெற்றன.

இந்நிகழ்ச்சிகளுக்கு கட்சி யின் மாவட்டச் செயலாளர் துரை.காமராஜ் தலைமை வகித்தார். ஒன்றியச் செயலா ளர் மலர்மன்னன் முன்னிலை வகித்தார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் கட்சிக் கொடியேற்றி, நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

சித்தளியில் நடைபெற்ற காதணி விழா கூட்டத்தில் விஜய பிரபாகரன் பேசியதாவது:

மக்களவைத் தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் விஜயகாந்த் நேரடியாக பிரச்சாரம் மேற்கொள்வார். தேமுதிகவை அழிக்க நினைப்ப வர்கள், இந்தத் தேர்தலில் அழிந்துவிடுவார்கள். திமுக பொருளாளர் துரைமுருகன் நம்மைப் பற்றி பேசியதில் இருந்து தேமுதிகவின் திருஷ்டி அழிக்கப்பட்டு விட்டது. இப்போது, கட்சி பாசிட்டிவ் எனர்ஜியாக வளர்ந்து உள்ளது என்றார்.

நிகழ்ச்சியில் மாநில மாணவ ரணி செயலாளர் விஜயகுமார், அரியலூர் மாவட்டச் செய லாளர் ராமஜெயவேல், துணைச் செயலாளர் சங்கர் கலந்துகொண்டனர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close