[X] Close

இலங்கை அணி ஒயிட்வாஷ்


  • kamadenu
  • Posted: 26 Mar, 2019 07:10 am
  • அ+ அ-

சிவகங்கை மக்களவைத் தொகுதி யில் பெரியாறு பாசன வசதி பெறும் 200 கிராமங்களின் ஆதர வைப் பெற அதிமுக, திமுக இடை யே கடும் போட்டி நிலவுகிறது.

சிவகங்கை மக்களவைத் தொகுதியில் ஷீல்டு, லெசிஸ், 48-வது மடைக் கால்வாய், கட்டாணிப்பட்டி-1, 2ஆகிய 5 நேரடி கால்வாய்கள் மூலம் தமராக்கி, கள்ளராதினிப்பட்டி, திருமலை, கட்டாணிப்பட்டி, நாமனூர் ஆகிய கிராமங்களில் 6,748 ஏக்கர் பாசன வசதி பெறுகின்றன.

அதேபோல் பெரியாறு விரிவா க்க, நீட்டிப்புக் கால்வாய்கள் மூலம் மதகுபட்டி, திருப்பத்தூர், சிங்கம் புணரி உள்ளிட்ட பகுதிகளில் 37,356 ஏக்கர் பாசன வசதி பெறுகின்றன. இதன் மூலம் 200-க்கும் மேற்பட்ட கிராம விவசாயிகள் பயன்பெறுகின்றனர்.

பெரியாறு, வைகை அணைகள் கடந்த ஆண்டு நிரம்பியதால், 20 ஆண்டுகள் கழித்து சிவகங்கை மாவட்ட பெரியாறு பாசன கால்வாய்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. அப்போது தண்ணீர் திறக்க திமுக, கம்யூ னிஸ்ட், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விவசாயிகளுடன் சேர்ந்து போராட்டம் நடத்தின. அதனால் தான் தண்ணீர் திறக் கப்பட்டதாகக் கூறி, அக்கட்சியினர் 200 கிராமங்களில் ஆதரவு திரட்டி வருகின்றனர்.

அதேபோல் அமைச்சர் பாஸ்கரன், செந்தில்நாதன் எம்பி. ஆகியோர் முதல்வரிடம் பேசி தண்ணீர் கொண்டு வந்த தாக அதிமுகவினர் ஆதரவு திரட்டி வருகின்றனர். இருதரப்பின ருக்கும் இடையே ஆதரவு திரட்டு வதில் போட்டி நிலவும்நிலையில், எந்தக் கட்சியினரும் உதவி செய்யவில்லை. தங்களது முயற் சியால் தான் தண்ணீர் வந்தது என விவசாயிகள் கூறி வருகின்றனர்

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close