[X] Close

சிவகங்கை சீட் பெற எம்.பி - அமைச்சர் மோதல்


sivagangai

  • kamadenu
  • Posted: 10 Mar, 2019 10:48 am
  • அ+ அ-

சிவகங்கை மக்களவைத் தொகு தியில் சீட் வாங்க தற் போதைய எம்பி செந்தில்நாதனும், தனது மகனுக்கு சீட் வாங்க அமைச்சர் பாஸ்கரனும் கட்சித் தலைமையிடம் முயற்சி செய்து வருகின்றனர். இதனால் இதுவரை இருவரும் இணைந்து செயல்பட்ட நிலையில் தற்போது அவர்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் மாவட்டச் செயலாளரும், எம்.பி.யுமான செந்தில்நாதன் பரிந்துரையின்பேரில் அமைச்சர் பாஸ்கரனுக்கு சிவகங்கை தொகுதியில் சீட் கிடைத்தது. இதனால் இருவரும் கலந்து ஆலோசித்த பிறகே அனைத்து முடிவுகளையும் எடுத்து வந்தனர்.

எந்தவொரு விழாவாக இருந்தாலும் அமைச்சர் வருகைக் காக எம்பியும், எம்பியின் வருகைக்காக அமைச்சரும் காத்திருந்து, இருவரும் சேர்ந்தே நிகழ்ச்சியில் பங்கேற்றனர். தங்களின் ஆதரவாளர்களுக்கு டெண்டர் எடுத்துத் தருவதிலும் கூட காரைக்குடி, திருப்பத்தூர் தொகுதிகளுக்குரிய பணிகளை எம்பியும், சிவகங்கை, மானா மதுரை தொகுதிகளுக்குரிய பணி களை அமைச்சரும் பிரித்துக் கொண்டனர்.

இந்நிலையில் மக்களவைத் தேர்தலில் மீண்டும் சிவகங்கையில் போட்டியிட செந்தில்நாதன் விரும்புகிறார். பாஸ்கரனோ தனது மகன் கருணாகரனுக்கு சீட் வாங்க முயற்சிக்கிறார். இதனால் இருவரது நட்பிலும் விரிசல் விழுந்துள்ளது. சமீப கால மாக மாவட்ட அளவிலான ஒரு சில விழாக்களை தவிர, மற்ற நிகழ்ச்சிகளில் அமைச்சருடன், எம்பி பங்கேற்பதைத் தவிர்த்து வருகிறார். அதேபோல் சமீபத்தில் நடந்த ஊரக வளர்ச்சி முகமை டெண்டரில் கூட இருவரின் ஆதரவாளர்களும் தனித்தனியாக விண்ணப்பித்தனர். இது குறித்து அதிமுக நிர்வாகி ஒருவர் கூறியதாவது: சட்டப் பேரவைத் தேர்தலுக்குப் பிறகு கடந்த 3 ஆண்டுகளாக அமைச்சரும், எம்.பி.யும் நகமும், சதையுமாக இருந்தனர். இதனால் சிவகங்கை மாவட்டத்தில் கோஷ்டிப் பூசல் இல்லாமல் இருந்தது. தற்போது சீட்டுக்காக இருவரும் எதிரும், புதிருமாக மாறிவிட்டனர்.

மேலும் கட்சி நிகழ்ச்சிகளில் அமைச்சரின் மகன் கருணா கரனுக்கு முக்கியத்துவம் கொடுப் பது எம்.பி.க்கு பிடிக்கவில்லை. இதனால் கோஷ்டிப் பூசல் உருவாகியுள்ளது.

இருவருக்கும் இடையேயான இந்த மோதல் போக்கு கட்சியின் வெற்றி வாய்ப்பை பாதிக்கக்கூடாது என்பதே எங்களின் விருப்பம் என்றார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close