[X] Close

திருவிழாக்களில் நாடகங்கள் மூலம் தேர்தல் பிரச்சாரம்


election-campaign

திருப்புவனத்தில் பூ மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற நாடகத்தில் தேர்தல் பிரச்சார உத்தியாக பாஜகவின் தாமரை சின்னம் தெரியும் வகையில் மின்விளக்குகள் அமைக்கப்பட்டிருந்தன.

  • kamadenu
  • Posted: 10 Mar, 2019 09:50 am
  • அ+ அ-

மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற நினைக்கும் அரசியல் கட்சிகள் தங்கள் கட்சி சின்னங்களை மக்களி டம் கொண்டு செல்ல பலவிதமான உத்திகளை கடைப்பிடிக்கத் தொ டங்கியுள்ளனர்.

மாசி, பங்குனி மாதம் கிராம ங்கள், நகரங்களில் உள்ள அம்மன் கோயில்களில் திருவிழாக்கள் நடைபெறுவதால் அவ்விழாக்களை அரசியல் கட்சியினர் தங்கள் பிரச்சாரக் களமாக மாற்றும் முயற் சியில் ஈடுபட்டுள்ளனர்.

இதில் தமது கட்சிகள் சார்பில் நாடகங்கள், கலை நிகழ்ச்சிகள், தண்ணீர் பந்தல் அமைப்பது போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இங்கு தமது கட்சியின் சார்பில் வாக்குகள் சேகரிக்கும் வகையில் அறிவிப்புகளை வெளி யிடுகின்றனர். கட்சி சின்னங்கள் தெரியும் வகையில் பொருட்களை இலவசமாக வழங்கி வருகின்றனர்.

மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் நன்னடத்தை விதிகள் ஆரம்பமாகிவிடும். இதற்குப் பிறகு பிரச்சாரம் மேற்கொள்ளும் செலவினங்கள் வேட்பாளரின் கணக்கில் சேர்க் கப்படும். இதை முன்கூட்டியே திட்டமிடும் அரசியல் கட்சிகள் சின்னங்களை மக்களிடம் கொண்டு செல்ல முயற்சி செய்கின்றனர். இதில் கூட்டணிக் கட்சிக்குள் தொகுதிகள் ஒதுக்கப்படுவதற்கு முன்பாகவே சின்னங்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.

சிவகங்கை தொகுதிக்குட்பட்ட திருப்புவனத்தில் பூ மாரியம்மன் கோயில் திருவிழா நடைபெற்றது. இதையொட்டி பாஜக மற்றும் பக்தர்கள் குரு சபை சார்பில் நாடகம் நடைபெற்றது.

இதில் தாமரை சின்னத்தை நினைவூட்டும் வகையில் மின் விளக்குகள் அலங்காரம் செய் யப்பட்டிருந்தன.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close