[X] Close

அருண் ஜேட்லி, ரிசர்வ் வங்கி கவர்னர் சந்திப்பு


  • kamadenu
  • Posted: 26 Mar, 2019 06:59 am
  • அ+ அ-

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட முன்னாள் மேயர் செ.ராமச்சந்திரன் திடீரென பின் வாங்கியதால், திமுகவினர் தவிக்கின்றனர். இது அதிமுகவினருக்கு கூடுதல் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பரங்குன்றம் தொகுதி இடைத் தேர்தல் விரைவில் நடக்கவுள்ளது. இத் தொகுதியை தக்கவைக்க அதிமுக தீவிரமாக பணியாற்றி வருகிறது. அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், அதிமுக செயலாளர் விவி.ராஜன்செல்லப்பா ஆகியோர் சைக்கிள் பேரணி, கட்சிக் கூட்டங்கள், நலத்திட்ட உதவி வழங்கி வாக்காளர்களை தங்கள் வளையத்துக்குள் வைக்க முயற்சி செய் கின்றனர்.

அமமுகவும் ஒரு பக்கம் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளது. ஆரம்பத்தில் பின்தங்கியிருந்த திமுக, தலைமையின் உத்தரவால் பணிகளை தீவிரப்படுத்தியது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்ற நலத்திட்ட உதவி வழங்கல், கிராமசபைக் கூட்டம், விருதுநகர் தென் மண்டல மாநாடு எனப் பல நிகழ்ச்சிகளில், திருப்பரங்குன்றம் தொகுதி திமுகவினரின் பங்களிப்பு கணி சமாக இருந்தது. அமமுகவில் இருந்து சில முக்கிய நிர்வாகிகள் திமுகவில் இணைக்கப்பட்டனர். இதனால் எப்படியும் வெற்றி பெறலாம் என்ற நம்பிக்கை துளிர்விட்டுள்ள நிலையில் திமுகவினர் உள்ளனர். இதனால் வேட்பாளர் தேர்வில் அக்கறை செலுத்தத் தொடங்கினர்.

இதுகுறித்து திமுக நிர்வாகிகள் கூறிய தாவது:

புறநகர் மாவட்டச் செயலாளர்கள் பி.மூர்த்தி எம்எல்ஏ., எம்.மணிமாறன் ஆகி யோர் ஓரணியாகவும், மதுரை மாநகர் பொறுப்புக் குழு தலைவர் கோ.தளபதி தலைமையிலான அணியினர் ஓரணியாகவும் செயல்படுகின்றனர். மதுரை மாநகராட்சியைச் சேர்ந்த விரிவாக்கப் பகுதியின் 13 வார்டுகள் திருப்பரங்குன்றம் தொகுதிக்குள் வருகிறது. இருதரப்பு நிர்வாகிகளும் ஒருங்கிணைந்து பணியாற்றினால் மட்டுமே வெற்றி பெற முடியும் என்ற நிலை உள்ளது.

இந்நிலையில், திருப்பரங்குன்றம் தொகுதியில் 2 முறை எம்எல்ஏ.வாக வெற்றி பெற்றவர், மதுரை மேயராக இருந்தவர் செ.ராமச்சந்திரன். இவருக்கு திருப்பரங்குன்றம் தொகுதியில் உறவினர்கள் அதிகம். அனைத்து தரப்பினரிடமும் நல்ல பெயர் உண்டு. திமுக வேட்பாளராக போட்டியிட்டால் அதிமுகவுக்கு கடும் சவாலாக இருப்பார். சில ஆண்டுகளாக அரசியலில் ஆர்வம் இன்றி ஒதுங்கியிருந்த செ.ராமச்சந்திரன்- ஸ்டாலின் சந்திப்பு மூர்த்தி எம்எல்ஏ முயற்சியில் நடந்தது. இதையடுத்து அவரே வேட்பாளர் என திமுகவினர் எதிர்பார்த்தனர்.

இதற்கிடையே மூர்த்தி எம்எல்ஏ. சிபாரிசு செய்தார் என்பதாலேயே மாநகர் நிர்வாகிகள் பலர் மறைமுகமாக எதிர்ப்பு காட்டினர். மேலும் களப்பணியாற்றுவதிலும், செலவு செய்வதிலும் அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரை மிஞ்ச முடியாது. எந்தச் சூழலையும் எதிர்கொண்டு அதிமுகவை வெற்றி பெறச்செய்துவிடுவார் என செ.ராமச் சந்திரனிடம் அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால், சீட் கேட்டு மனுவையே கட்சித் தலைமையிடம் ராமச்சந்திரன் அளிக்கவில்லை. தெற்கு மாவட்ட திமுக செயலாளர் மணிமாறன், எஸ்.ஆர்.கோபி, மருத்துவர் சரவணன் உட்பட 10 பேர் சீட் கேட்டுள்ளனர். மதுரை மக்களவைத் தொகுதியில் மட்டுமே போட்டியிட விருப்பம் தெரிவித்து ராமச்சந்திரன் மனு அளித்திருந்தார். மதுரை தொகுதி கூட்டணிக் கட்சியான கம்யூனிஸ்ட்டுக்கு ஒதுக்கப்படும் வாய்ப்புள்ளதால் அங்கும் ராமச்சந்திரனுக்கு வாய்ப்பிருக்காது.

ராமச்சந்திரன் மனு செய்யாததை அறிந்த கட்சித் தலைமையும் அதிர்ச்சியடைந்தது. ஏற்கெனவே எம்எல்ஏ, மேயர் போன்ற பதவி களை வகித்துவிட்டதால் எம்பி., தேர்தலில் வேண்டுமானால் போட்டியிடுகிறேன் என கட்சித் தலைமையிடம், ராமச்சந்திரன் பதிலளித்து விட்டார். நல்ல வேட்பாளர் கிடைத்தும் இடைத்தேர்தல், எம்பி தேர்தல் என எதிலும் பயன்படுத்த முடியாமல் போகிறதே என்ற விரக்தியில் திமுகவினர் உள்ளனர் என்றனர்.

இத்தகவல் அதிமுகவினருக்கு கூடுதல் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது,

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close