[X] Close

ஹாட்லீக்ஸ் :அழகிரி ஸ்டைலில் அனிதா


hotleaks

அனிதா ராதாகிருஷ்ணன்

  • kamadenu
  • Posted: 10 Mar, 2019 08:45 am
  • அ+ அ-

தூத்துக்குடியில்  களமிறங்கவிருக்கும் கனிமொழிக்கு  யார் அதிக வாக்குகளைப் பெற்றுக்கொடுப்பது என்பதில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கும் வடக்கு மாவட்டச் செயலாளர் கீதா ஜீவனுக்கும்  இடையில் கடும் போட்டியே நடக்கிறது. 

தனது மாவட்டத்துக்குள் வரும் மூன்று சட்டமன்றத் தொகுதிகளில் எந்த பூத் கமிட்டி (20 நபர்கள் கொண்டது) திமுகவுக்கு அதிகமான வாக்குகளைப் பெற்றுத் தருகிறதோ அவர்களுக்கு 100 பவுன் பரிசு என அறிவித்திருக்கிறார் அனிதா. 

தன்னை மேடையில் வைத்துக்கொண்டு அனிதா,  அழகிரி ஸ்டைலில் இப்படி அறிவித்ததால் தன் பங்காக கூடுதலாக 25 பவுன் தருவதாக அறிவித்திருக்கிறார் கனிமொழி. 

இதைப் பார்த்துவிட்டு கீதா ஜீவன் என்ன ஆஃபர் அறிவிக்கப் போகிறாரே என அவரது  மாவட்டத்து உடன்பிறப்புகள் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்.

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close