[X] Close

தென் சென்னை தொகுதி: டெபாசிட் தொகையை சில்லறையாகக் கொடுத்த சுயேச்சை வேட்பாளர்


  • kamadenu
  • Posted: 25 Mar, 2019 21:44 pm
  • அ+ அ-

தமிழகத்தில் நடைபெறவுள்ள 21 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்தவர்களிடம் அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நேர்காணல் நடைபெற்றது.

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுடன், காலியாகவுள்ள 21 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இடைத்தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் தலைமைக் கழகத்தில் மனு கொடுக்கலாம் என்று திமுக தெரிவித்தது. அதன் படி, முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி உட்பட ஏராள மானோர் மனு செய்திருந்தனர்.

நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தல்

நேர்காணலுக்கு வரும்போது பரிந்துரை செய்தவர்கள், ஆதர வாளர்களை அழைத்து வரக்கூடாது என்று திமுக ஏற்கெனவே அறிவுறுத்தியிருந்தது.

இந்நிலையில் 21 சட்டப் பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்து திமுக தலைமைக் கழகத்தில் விண்ணப்பம் அளித்தவர்களை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் பொருளாளர் துரைமுருகன், முதன்மைச் செயலாளர் டி.ஆர்.பாலு ஆகியோர் நேற்று நேரில் சந்தித்து தொகுதி நிலவரம், வெற்றி வாய்ப்புக்கான காரணங்கள் குறித்து நேர்காணல் நடத்தினர்.

இந்த நேர்காணலின்போது, அந்தந்த சட்டப்பேரவை தொகுதி யைச் சேர்ந்த மாவட்ட செயலாளர் கள், மாவட்ட நிர்வாகிகள், செயற் குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பகுதிக் கழக செயலாளர்களிடமும் தொகுதி நிலவரம் குறித்து விசாரித்தனர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close