[X] Close

கமல் கட்சியில் 1,137 பேர் விருப்ப மனு


kamal

மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில், மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் கமல்ஹாசனிடம் விருப்பமனு வழங்கிய பெண்கள் | படம்: ம.பிரபு

  • kamadenu
  • Posted: 09 Mar, 2019 09:02 am
  • அ+ அ-

மக்கள் நீதி மய்யம் 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட உள்ளதாக கட்சித் தலைவர் கமல்ஹாசன் அறிவித்தார். 40 தொகுதிகளிலும் போட்டியிட விரும்புபவர்கள் விருப்ப மனுக்களை தாக்கல் செய்யலாம். கட்சி உறுப்பினராக இல்லாதவர்களும் விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டது.

விருப்ப மனு விநியோகம் கடந்த மாதம் 28-ம் தேதி தொடங்கியது. 2 நாட்களுக்கு முன்பு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்துக்கு நேரில் வந்து, விருப்ப மனுக்களை கமல்ஹாசன் பெற்றுக்கொண்டார்.

பூர்த்தி செய்யப்பட்ட விருப்ப மனுக்கள் ரூ.10 ஆயிரம் கட்டணத்துடன் தாக்கல் செய்யப்பட்டன. 7-ம் தேதி மாலையுடன் விருப்ப மனு பெறும் நடவடிக்கைகள் நிறைவடைந்தன.

மக்களவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்து 1,137 பேர் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளனர்.

கமல்ஹாசன் தங்களது தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று விருப்பம் தெரிவித்து150-க்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் விருப்ப மனு அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close