[X] Close

பெங்களூருவில் ‘ஓலா’ கார் மீதான தடை நீக்கம்


  • kamadenu
  • Posted: 25 Mar, 2019 07:14 am
  • அ+ அ-

மக்களவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணிக்கு 13 கட்சிகள், அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

திமுக தலைமையிலான கூட்டணியில் திமுக 20, காங்கிரஸ் 10, மார்க்சிஸ்ட் 2, இந்திய கம்யூனிஸ்ட் 2, விசிக 2, மதிமுக 1, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 1, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி 1, இந்திய ஜனநாயகக் கட்சி 1 என தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், தேர்தலில் போட்டியிடாமல் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவிக்கும் கட்சிகளின் கூட்டம் திமுக தலைமை அலுவலகமான சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நேற்று காலை நடந்தது.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பொருளாளர் துரைமுருகன், முதன்மைச் செயலாளர் டி.ஆர்.பாலு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்எம்.வீரப்பனின் எம்ஜிஆர் கழகம் உட்பட 13 கட்சிகள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்தன.

திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச் செயலாளர் சுப.வீரபாண்டியன், தமிழ்நாடு விவசாயிகள், தொழிலாளர்கள் கட்சித் தலைவர் பொன்.குமார், பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர்.தனபாலன், இந்திய சமூக நீதி இயக்கத் தலைவர் பேராயர் எஸ்றா சற்குணம், உழவர் உழைப்பாளர் கட்சித் தலைவர் கு.செல்லமுத்து, தமிழ் மாநில தேசிய லீக் பொதுச் செயலாளர் திருப்பூர் அல்தாப், அகில இந்திய வல்லரசு பார்வர்டு பிளாக் தலைவர் பி.என்.அம்மாவாசி, அகில இந்திய பார்வர்டு பிளாக் மாநிலப் பொதுச் செயலாளர் பி.வி.கதிரவன், ஆதித்தமிழர் பேரவை தலைவர் இரா.அதியமான், சமத்துவ மக்கள் கழகத் தலைவர் எர்ணாவூர் நாராயணன், இந்திய தேசிய லீக் தலைவர் எம்.பஷீர் அகமது, கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத் தலைவர் இனிகோ இருதயராஜ், மக்கள் விடுதலைக் கட்சித் தலைவர் சு.க.முருகவேல்ராஜன் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.

மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியின் வெற்றிக்கு இந்த அமைப்புகள் எவ்வாறு பணியாற்றுவது என்பது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close