[X] Close

காஷ்மீரில் தாக்குதல்கள் நடத்த சதி; தீவிரவாதிகளுக்கு நிதியுதவி செய்த 13 பேர் அடையாளம் கண்டுபிடிப்பு: மத்திய அரசு உயர் அதிகாரிகள் தகவல்


13

  • kamadenu
  • Posted: 25 Mar, 2019 07:04 am
  • அ+ அ-

நான் மக்களவைக்கு போட்டியிடுவதா, மாநிலங்களவைக்கு போட்டிடுவதா என இப்போது கூற முடியாது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.

மதிமுக மகளிரணி சார்பில் உலக மகளிர் தின விழா திருச்சியில் நேற்று நடைபெற்றது. மகளிரணி மாநிலச் செயலாளர் டாக்டர் ரொஹையா தலைமை வகித்தார். இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட வைகோ, பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: திமுகவின் தலைமையிலான கூட்டணி மக்களவைத் தேர்தலில் 40 தொகுதிகளிலும், இடைத்தேர்தலில் 21 தொகுதிகளிலும் மகத்தான வெற்றி பெறும். தேர்தல் முடிவுக்கு பிறகு, கூட்டாட்சித் தத்துவத்தை நிலைநிறுத்தும் வகையில் மாநில கட்சிகளும், காங்கிரஸ் கட்சியும் இணைந்து மத்தியில் ஆட்சி அமைக்கும்.

திமுக கூட்டணி உறுதியாக வெற்றி பெறும். நான் மக்களவைக்கு போட்டியிடுவதா, மாநிலங்களவைக்கு போட்டிடுவதா என இப்போது கூறமுடியாது.

துரைமுருகன் வீட்டை முற்றுகையிட்ட தேமுதிகவினரை எச்சரிக்கிறேன். நாங்கள் ஒரு கூட்டணியில் இருந்தால், அதற்காக உயிரைக் கொடுப்போம். துரைமுருகன் வீட்டை முற்றுகையிடுவது போன்ற வேலையில் ஈடுபட்டு, விபரீதத்தை விலைக்கு வாங்க வேண்டாம் என்றார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close