[X] Close

‘இரட்டைத்தாக்குதல்’ மூலம் அதிமுக வாக்குகளை பிரிக்க திட்டம்: தங்க தமிழ்ச்செல்வனின் இடம்பெயர்வு பின்னணி


  • kamadenu
  • Posted: 24 Mar, 2019 10:02 am
  • அ+ அ-

பாதுகாப்பு ஆவணங்களையே பாதுக்காக்க முடியாத மோடிதான் இந்த நாட்டை பாதுக்காக்க போகிறாரா? என திமுக தலைவர்  ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

திமுக தோழமைக்கட்சிகள் ஆலோசனைக்கூட்டத்துக்குப் பின் அறிவாலயத்தில் ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

திராவிட இயக்க தமிழர் பேரவை, தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர் கட்சி, பெருந்தலைவர் மக்கள் கட்சி, இந்திய சமூக நீதி இயக்கம், உழவர் உழைப்பாளர் கட்சி என, தமிழ் மாநில தேசிய லீக், அகில இந்திய பார்வர்ட் பிளாக், ஆதித்தமிழர் பேரவை, சமத்துவ மக்கள் கழகம், இந்திய தேசிய லீக், கிருத்துவ நல்லிணக்க கட்சி உள்ளிட்ட கட்சிகள் என்னை சந்தித்தனர்.

கூட்டத்தில் ஆதரவை தெரிவித்தனர், வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் என்னவகையான பிரச்சாரம் செய்யலாம், யுக்திகள் குறித்த ஆலோசனை அளித்தனர். அதற்காக நன்றித்தெரிவித்துக் கொள்கிறேன்.

தோழமைக்கட்சிகள் காங்கிரஸுக்கு எப்போது தொகுதி ஒதுக்கப்படும்?

காங்கிரஸ் கட்சி தொகுதி குறித்து பேசக்குழுவை இன்னும் அறிவிக்கவில்லை. காங்கிரஸ் தலைவர் அழகிரியிடம் பேசினேன் இன்று இரவு அறிவிக்க உள்ளதாக தெரிவித்தார். பின்னர் நாளை பேசி காங்கிரஸ் குறித்து முடிவு செய்யும்.

அதன் பின்னர் வரிசையாக படிப்படியாக கூட்டணியில் உள்ள அனைத்துத் தலைவர்களையும் அழைத்துப்பேசி முடிவு செய்து அறிவிப்போம்.

தேர்தலில் புதியவர்களுக்கு வாய்ப்பு இருக்குமா?

அதை அறிவிக்கும்போது உங்களுக்கே கண்கூடாக தெரியும்.

தேமுதிக வைத்துள்ள குற்றச்சாட்டு ஏற்கக்கூடியதா?

அதைப்பற்றி நான் பேச விரும்பவில்லை. பொருளாளர் துரைமுருகன் விரிவாக விளக்காமாக கூறியுள்ளார். இதற்குமேல் இதுகுறித்து பேசி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. நீங்களும் உங்கள் நேரத்தை வீணடிக்காதீர்கள்.

துரைமுருகன் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதே?

ஒருவேளை தேமுதிகவிலிருந்து ,மீண்டும் வந்து பேசுவார்களோ என்கிற எண்ணத்தில் அதை தடுத்து நிறுத்த ஆளுங்கட்சி போலீஸாரை போட்டிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

தொகுதி உடன்பாடு இரண்டொரு நாளில் முடித்துவிட்டு,  திமுக போட்டியிடும் தொகுதிகள் மற்றும் வேட்பாளர்கள் யார் யார் என்பது இரண்டு, மூன்று நாட்களில் அறிவிப்போம், அதுமட்டுமல்ல தேர்தலுடன் சேர்ந்து 21 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்படலாம்.

அப்படி அறிவிக்கப்பட்டால் அதை சந்திக்கவும் வேட்பாளரை திமுக அறிவிக்கும். ஆனால் இடைத்தேர்தலை நடத்தாமல் இருக்க முயற்சிப்பதாக அறிகிறேன். அப்படி நடந்தால் அது ஜனநாயக படுகொலை.

ரஃபேல் ஆவணங்கள் காணாமல்போனதாக தெரிவித்துள்ளார்களே?

பாதுகாப்புத்துறை ஆவணத்தையே பாதுகாக்க முடியாத மோடி இந்தியாவை எப்படி பாதுக்காக்கப்போகிறார் என்பதுதான் எங்கள் முன் உள்ள கேள்வி. ஆகவே இவர்களை வீழ்த்துவதற்காகத்தான் இந்த கூட்டணி.

 மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close