[X] Close

புகழேந்தி கிளப்பும் ‘புத்தக’ பீதி


pukazendhi

  • kamadenu
  • Posted: 08 Mar, 2019 09:46 am
  • அ+ அ-

அமமுக சார்பில் ஜெயலலிதாவின் 71-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் தஞ்சாவூரில் நடந்தது. இதைத் தொடர்ந்து, அக்கட்சியின் கர்நாடக மாநில பொதுச் செயலாளர் புகழேந்தி செய்தியாளர்களிடம் கூறியதாவது:குக்கர் சின்னத்தை எங்களுக்கு தருமாறு உயர் நீதிமன்றம் ஏற்கெனவே கூறிவிட்டது. இப்போது அதில் எந்த பிரச்சினையும் இல்லை. ஜெயலலிதா இருக்கும்போது கடந்த மக்களவைத்தேர்தலில் வெற்றி பெற்ற 37 தொகுதிகளிலும் அமமுக சார்பில் போட்டியிடும். தேர்தல் தேதி அறிவித்தவுடன், வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.

அதிமுக கூட்டணியில் பணம் அதிகம் விளையாடுகிறது. பாமகவுக்கு ரூ.500 கோடி கைமாறியது. தேமுதிகவுக்கான ரூ.500 கோடி பேரம் இன்னும் முடியவில்லை. ஜெயலலிதாவுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியதோடு, அவருக்கு எதிராக உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் வாங்கி கொடுத்த பாமகவுடன் அதிமுகவினர் கூட்டணி வைத்துள்ளனர். இதுகுறித்து தேர்தல் நேரத்தில் புத்தகம் வெளியிடப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close