[X] Close

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு பிசிசிஐ சார்பில் ரூ.20 கோடி நிதி


20

  • kamadenu
  • Posted: 24 Mar, 2019 07:50 am
  • அ+ அ-

மதுரை திருப்பரங்குன்றத்தில் தேமுதிக செயல்வீரர்களின் தேர்தல் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. இதில் பங்கேற்பதற்காக கட்சியின் மாவட்டச் செயலாளர் கவியரசு தலைமையில் அக்கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பைக்காராவில் திரண்டனர். பேண்டு வாத்தியங்களோடு ஆட்டோ, பைக்குகளில் திருப்பரங்குன்றத்துக்கு புறப்பட்டுச் சென்றனர்.

இந்த நிலையில், பசுமலை அருகே தேமுதிக ஊர்வலத்தை போலீஸார் தடுத்து நிறுத்தினர். ‘ஆலோசனைக் கூட்டம் நடத்த மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வாகனங்களில் ஊர்வலமாகச் செல்வதை அனுமதிக்க முடியாது’ என்று அவர்கள் கூறியதால் தேமுதிகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பின்னர், அவர்கள் கொண்டுவந்த பேண்டு வாத்தியக் கருவிகள் உள்ளிட்டவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து, தேமுதிகவினர் ஊர்வலத்தைக் கைவிட்டு தனித்தனியாக ஆலோசனைக் கூட்டத்துக்கு புறப்பட்டுச் சென்றனர்.

‘‘ஊர்வலமாகத்தான் போக விடல. வாத்தியக் கருவிகளையாவது திருப்பிக் கொடுங்க’’ என்று போலீஸாரிடம் தேமுதிகவினர் கேட்டனர். சிறிது நேரம் போக்கு காட்டிய போலீஸார், பிறகு வாடகை வாகனம் வரவழைத்து அதில் இசைக்கருவிகளை ஏற்றிச் செல்ல அனுமதித்தனர். ‘‘கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்து ஆகிட்டா, இப்படி செய்வாங்களா’’ என்று புலம்பியபடியே தேமுதிகவினர் புறப்பட்டுச் சென்றனர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close