[X] Close

தமிழகத்தில் போட்டி இல்லை; பாஜக கூட்டணியை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சி பிரச்சாரம்: தமிழக ஒருங்கிணைப்பாளர் வசீகரன் தகவல்


  • kamadenu
  • Posted: 24 Mar, 2019 06:06 am
  • அ+ அ-

மண்டியா

மண்டியா தொகுதியில் போட்டியிட திட்டமிட்டுள்ள மறைந்த நடிகர் அம்பரீஷின் மனைவியும், நடிகையுமான சுமலதா பாஜகவில் இணைவது தொடர்பாக இதுவரை முடிவு எடுக்கப்படவில்லை, அதேசமயம் விரைவில் முடிவு எடுப்போம் என கர்நாடக மாநில பாஜக தலைவர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

கன்னட நடிகரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அம்பரீஷ் அண்மையில் காலமானார். அம்பரீஷின் சொந்த‌ தொகுதியான மண்டியாவில் அவரது மனைவியும், நடிகையுமான சுமலதா, மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்தார்.

ஆனால், இதற்கு கர்நாடக முதல்வர் குமாரசாமி எதிர்ப்பு தெரிவித்தார். மேலும், அந்தத் தொகுதியில் தமது மகன் நிகில் கவுடாவை களமிறக்கவும் குமாரசாமி திட்டமிட்டுள்ளார். இதனால்,கூட்டணிக் கட்சியான காங்கிரஸிடம் அந்த தொகுதியை எக்காரணம் கொண்டும் விட்டுத்தர முடியாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

எனினும், மண்டியாவில் போட்டியிட காங்கிரஸ் மேலிடம் தமக்குவாய்ப்பு வழங்கும் என்றும்,இல்லையெனில், அங்கு சுயேச்சையாக போட்டியிடுவேன் எனவும் சுமலதா தெரிவித்திருக்கிறார். சுமலதா சுயேச்சையாக களமிறங்கினால் ஆதரவு அளிப்பதாக பாஜக தலைவர்கள் சிலர் அறிவித்தனர். இதனால் காங்கிரஸூக்கு நெருக்கடிஏற்பட்டுள்ள நிலையில், சுமலதா மண்டியாவில் தொடர்ந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்தநிலையில் சுமலதா பாஜகவில் இணையவுள்ளதாக தகவல் வெளியானது.

இதுகுறித்து கர்நாடக மாநில பாஜக தலைவர் எடியூரப்பா கூறுகையில் ‘‘சுமலதா பாஜகவில் இணைவது தொடர்பாக இதுவரை எந்த முடிவையும் நாங்கள் எடுக்கவில்லை. விரைவில் இந்த விவகாரத்தில் இறுதி முடிவு எடுப்போம்’’ எனக் கூறினார்.

இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள சுமலா ‘‘தற்போதைய நிலையில், காங்கிரஸ் சார்பில் மண்டியாவில் போட்டியிடவே விரும்புகிறேன். ஆனால் அதற்கு வாய்ப்பில்லை என்றால் எனது ஆதரவாளர்களுடன் ஆலோசித்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பேன்’’ எனக் கூறினார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close