[X] Close

தமிழிசை மறந்துவிட்டாரா? மறைக்கிறாரா?- கூட்டணி கேள்விக்கு திமுக எம்.எல்.ஏ., பதிலடி


tamilisai-tweet

  • பாரதி ஆனந்த்
  • Posted: 07 Mar, 2019 14:24 pm
  • அ+ அ-

திமுக - காங்கிரஸ் கூட்டணியை விமர்சித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பதிவிட்ட ட்வீட்டுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார் திமுக எம்.எல்.ஏ. அன்பழகன்.

முன்னதாக தமிழிசை தனது ட்விட்டர் பக்கத்தில், "கலைஞர் உயிரோடிருந்தால்... இன்று ஸ்டாலின் அமைத்திருக்கும் காங்கிரசுடனான கூட்டணியை அமைத்திருக்க மாட்டார்... ஏனென்றால் கூடாநட்பு கேடாய் முடியும் எனக் கூறியதும் அவர்தானே?" எனப் பதிவிட்டிருந்தார்.

இதற்கு பதிலளித்த சென்னை சேப்பாக்கம் தொகுதி திமுக எம்.எல்.ஏ., ஜெ.அன்பழகன், "சகோதரி டாக்டர் தமிழிசை அவர்களுக்கு செலக்டிவ் அம்னிஷியா.

தலைவர் கலைஞர் சந்தித்த கடைசி தேர்தலான கடந்த சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் பேரியக்கத்தோடுதான் திமுக களம் கண்டது. இரண்டாண்டுகளுக்கு முன் நடந்ததை மறந்துவிட்டாரா? வசதியாக மறைக்கிறாரா?" எனப் பதிவிட்டுள்ளார்.

இதே கருத்தை நெட்டிசன்கள் பலரும் தமிழிசைக்கு தெரிவித்திருக்கின்றனர். மக்களவை தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் திமுக, காங்கிரஸ், விசிக, மதிமுக, கொமதேக, மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் ஓரணியில் திரண்டுள்ளன.

அதிமுக, பாஜக, பாமக, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் இணைந்துள்ளன. தேமுதிக பேச்சுவார்த்தையில் இருக்கிறது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close