[X] Close

பிரதமர் மோடியை எதிர்த்து வாரணாசியில் தொகாடியா போட்டி?


  • kamadenu
  • Posted: 23 Mar, 2019 10:55 am
  • அ+ அ-

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வரும் 13-ம் தேதி கன்னியாகுமரி வருகிறார். அங்கு நடக்கும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் அவருடன் மு.க.ஸ்டாலின், வைகோ, திருமாவளவன் உள்ளிட்ட 9 கட்சித் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

மக்களவைத் தேர்தலில் தமிழ கத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில் தொகுதிப் பங்கீடு நேற்று முன்தினம் நிறைவடைந்தது. காங்கிரஸ் 10, மார்க்சிஸ்ட் 2, இந்திய கம்யூனிஸ்ட் 2, விசிக 2, மதிமுக 1, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 1, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி 1, இந்திய ஜனநாயகக் கட்சி 1 என கூட்டணி கட்சிகளுக்கு 20 தொகுதிகளை ஒதுக்கிவிட்டு, மீதமுள்ள 20 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது. தொகுதிப் பங்கீடு முடிந்த நிலையில் நேற்று விருதுநகரில் நடந்த திமுக தென் மண்டல மாநாட்டில் ஸ்டாலின் பேசினார்.

இந்நிலையில், திமுக – காங்கிரஸ் கூட்டணியில் உள்ள 9 கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்கும் முதல் பிரச்சார பொதுக்கூட்டம் வரும் 13-ம் தேதி கன்னியாகுமரியில் நடக்க உள்ளது. காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பங்கேற்கும் இந்தக் கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், விசிக தலைவர் திருமாவளவன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் கே.எம்.காதர் மொகிதீன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன், இந்திய ஜனநாயகக் கட்சி நிறுவனர் பாரிவேந்தர் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

இதுதொடர்பாக தமிழககாங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று வெளியிட்ட அறிக்கையில், 'கருணாநிதியைப்போல சூழலுக்கேற்ப, பரந்த மனப்பான்மையுடன் அனைவரையும் அரவணைத்து கூட்டணிக் கட்சிகளுக்கு தொகுதிப் பங்கீட்டை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முடித்துள்ளது பாராட்டுக்குரியது. இதற்காக காங்கிரஸ் சார்பில் அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.. திமுக தலைமையிலான கூட்டணி கொள்கைக் கூட்டணி. அதிமுக கூட் டணி சந்தர்ப்பவாத கூட்டணி. வரும் 13-ம் தேதி பிற்பகல் 2 மணி அளவில் கன்னியாகுமரியில் நடக்கும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பங்கேற்கிறார். இதில் திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கிறார்கள்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close