[X] Close

இன்றைய வசதிக்காக, நாளைய பாதுகாப்பைப் பலி கொடுக்கிறோம்


  • kamadenu
  • Posted: 23 Mar, 2019 10:08 am
  • அ+ அ-

மக்களவைத் தேர்தலில் எந்த சின்னத்தில் போட்டியிடுவது என்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

மதிமுகவின் 27-வது பொதுக்குழுக் கூட்டம் சென்னையில் நேற்றுநடைபெற்றது. தமிழகம் முழுவதும்இருந்து பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள் அக்கூட்டத்தில் கலந்துகொண்டனர். கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களிடம் வைகோ கூறியதாவது:பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, காவிரி, முல்லைப் பெரியாறு, நியூட்ரினோ, ஸ்டெர்லைட், போன்றவற்றில் கையாண்ட அணுகுமுறையையும், காவிரி டெல்டா மாவட்டங்களை ஹைட்ரோ கார்பன் மண்டலமாக மாற்றும் போக்கு, இடஒதுக்கீட்டுக் கொள்கையில் சமூக நீதிக்கு எதிரான செயல்பாடுகள் குறித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன.

மதச்சார்பின்மைக்கு எதிராக செயல்படும் மத்திய அரசை அகற்ற வேண்டும் என்ற குறிக்கோளுடன் திமுகவும், மதிமுகவும் கூட்டணி அமைத்துள்ளது.

திமுக கூட்டணியில், மதிமுகவுக்கு ஒரு மக்களவைத் தொகுதியும், நாங்கள் கேட்காமலேயே மாநிலங்களவை உறுப்பினர் இடம் ஒன்றும் ஒதுக்கியுள்ளனர். மாநிலங்களவை உறுப்பினருக்கு தேர்வு ஆவதற்கு, 34 எம்எல்ஏக்கள் வாக்களிக்க வேண்டும் என்ற அடிப்படையில் கணக்கிட்டால், இது 6 மக்களவைத் தொகுதிகளுக்கு சமம்.

எனவே இதனை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டுள்ளோம். எந்த சின்னத்தில் போட்டியிடுவது என்பது பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை. தேமுதிக எந்தக் கூட்டணியில் இடம் பெற்றாலும் அதிமுக,பாஜக அணி தோற்பது உறுதி. மேலும் 7 பேர் விடுதலை குறித்தமாநில அரசின் கோரிக்கையை மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு ஆளுநர் அனுப்பி வைத்துள்ளதில் சந்தேகம் உள்ளது.

இவ்வாறு வைகோ கூறினார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close