[X] Close

அகிலேஷ் - மாயாவதி கூட்டணியில் ஆர்எல்டி கட்சிக்கு 3 தொகுதிகள்


akilesh-mayawati-combinaton

  • kamadenu
  • Posted: 06 Mar, 2019 10:43 am
  • அ+ அ-

வரும் மக்களவை தேர்தலை யொட்டி உ.பி.யில் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சியும் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியும் கூட்டணி அமைத்துள்ளன. இந்தக் கூட்டணியில் அஜித் சிங்கின் ராஷ்ட்ரிய லோக் தளம் (ஆர்எல்டி) கட்சி இணைந்துள்ளது.

இக்கட்சியின் தலைவரும் அஜித் சிங்கின் மகனுமான ஜெயந்த் சவுத்ரி நேற்று லக்னோவில் உள்ள சமாஜ்வாதி கட்சி அலுவலகத்தில் அகிலேஷ் யாதவை சந்தித்தார்.

பின்னர் இருவரும் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது ஜெயந்த் சவுத்ரி கூறும்போது, “அகிலேஷ் – மாயாவதி கூட்டணியில் ஆர்எல்டி கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மேற்கு உ.பி.யில் மதுரா, பக்பத், முசாபர்நகர் ஆகிய தொகுதிகளில் எங்கள் கட்சி போட்டியிடும்” என்றார்.

அகிலேஷ் யாதவ் கூறும்போது, “பாஜகவுக்கு எதிரான எங்களின் மகா கூட்டணியில் காங்கிரஸ் கட்சியும் உள்ளது. அக்கட்சிக்கு அமேதி,ரேபரேலி ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன” என்றார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close