[X] Close

திரையிசையின் தாய்மாமன்!


  • kamadenu
  • Posted: 22 Mar, 2019 12:22 pm
  • அ+ அ-

திமுகவுக்கு எதிராக 25 ஆண்டு களுக்கு முன்பு மதிமுகவை தொடங்கிய வைகோ, மீண்டும் தொடங்கிய இடத்துக்கே வந்துள்ளார். திமுக சார்பில் மாநிலங்களவை எம்.பி.யாகும் வாய்ப்பு 29 ஆண்டுகளுக்குப் பிறகு அவருக்கு கிடைக்கிறது.

திமுக மாணவர் அணியில் 1970-ல் இணைந்த வைகோ, தனது பேச்சாற்றலால் வேகமாக வளர்ந்தார். அதே ஆண்டில் தனது சொந்த கிராமமான கலிங்கப்பட்டி ஊராட்சித் தலை வர் தேர்தலில் வென்று, குருவிக் குளம் ஊராட்சி ஒன்றியத் தலை வர் ஆனார். 1978-ல் முதன் முதலாக மாநிலங்களவை எம்.பி.யான அவர், தொடர்ந்து 3 முறை அதாவது 1996 வரை மாநி லங்களவை எம்.பி.யாக இருந்தார்.

1989 மக்களவைத் தேர்த லில் சிவகாசியில் போட்டியிட்டு, அதிமுக வேட்பாளர் காளிமுத்து விடம் தோல்வி அடைந்தார். பிறகு அதே சிவகாசியில் 1998, 1999 மக்களவைத் தேர்தலில் வைகோ வென்றார்.

கருணாநிதிக்குகூட தெரிவிக் காமல் ரகசியமாக இலங்கை சென்று விடுதலைப் புலிகளை வைகோ சந்தித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. அதுமுதல், திமுக தலைமை - வைகோ இடையே இடைவெளி ஏற்படத் தொடங்கியது.

ராஜீவ் படுகொலைக்குப் பிறகு, 1991 சட்டப்பேரவைத் தேர் தலில் திமுக படுதோல்வி அடைந் தது. கருணாநிதி - வைகோ மோத லும் அதிகரித்தது. வைகோவின் அரசியல் நலனுக்காக புலிகள் தன்னை கொல்ல திட்டமிட்டுள் ளதாக 1993 அக்டோபரில் குற்றம் சாட்டினார் கருணாநிதி. திமுக வில் இருந்து வைகோ நீக்கப்பட்டார்.

1994 மே 6-ல் மதிமுகவை தொடங்கினார் வைகோ. ஸ்டாலின் திமுக தலைவராவ தற்கு நான் இடையூறாக இருப்பேன் என்று கருதி தன்னை கருணாநிதி நீக்கியதாக வைகோ குற்றம்சாட்டினார்.

வைகோ நீக்கப்பட்டதும் திமுகவில் பிளவு ஏற்பட்டது. திமுக தொண்டர்கள் 5 பேர் தீக்குளித்து இறந்தனர். 9 மாவட்டச் செயலாளர்கள் வைகோவுக்கு ஆதரவு தெரிவித்தனர். வைகோ செல்லும் இடங்களில் எல்லாம் பெரும் கூட்டம் திரண்டது.

1996-ல் மார்க்சிஸ்ட், ஜனதா தளத்துடன் கூட்டணி அமைத்து மதிமுக போட்டியிட்டது. ஆனால், வைகோவால்கூட வெற்றிபெற முடியவில்லை. 1996-ல் அமைந்த திமுக - தமாகா கூட்டணி, வைகோ வின் எழுச்சியை தொடக்கத் திலேயே தகர்த்தது.

1998 மக்களவைத் தேர்தலில் அதிமுக - பாஜக - பாமக கூட்டணியில் போட்டியிட்ட மதி முக 3 தொகுதியில் வென்றது. திமுகவுக்கு எதிராக 1994-ல் கட்சி ஆரம்பித்த வைகோ, 1999-ல் திமுகவுடன் கூட்டணி அமைத்தார். 2004 மக்களவைத் தேர்தலிலும் மதிமுக - திமுக கூட்டணி தொடர்ந்தது. இந்நிலையில், 15 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது 2019 மக்களவைத் தேர்தலில் திமுகவுடன் மீண்டும் கூட்டணி சேர்ந்துள்ளார் வைகோ.

வாக்கு சதவீதம்

1996-ல் 5.78% வாக்குகளைப் பெற்ற மதிமுக, 2001-ல் 4.65%, 2006-ல் 5.98% என குறிப்பிடத்தக்க அளவில் வாக்குகளைப் பெற்றது. 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிக - மக்கள்நலக் கூட்டணி யில் போட்டியிட்ட மதிமுக 0.86% வாக்குகள் மட்டுமே பெற்றது. மதிமுகவில் இருந்து முக்கியத் தலைவர்கள், நிர்வாகிகள் பலர் மீண்டும் திமுகவில் இணைந்தனர்.

1989, 1999-ல் 5 தொகுதிகள், 2004, 2009-ல் 4 தொகுதிகள், 2014-ல் 7 தொகுதிகளில் போட்டியிட்ட மதிமுகவுக்கு இந்த முறை 1 மக்களவைத் தொகுதியும், 1 மாநிலங்களவை இடமும் கிடைத்துள்ளது. இதன்மூலம் 1990-க்கு, அதாவது 29 ஆண்டுகளுக்குப் பிறகு திமுக சார்பில் மீண்டும் மாநிலங்களவை உறுப்பினராகும் வாய்ப்பு வைகோ வுக்கு கிடைத்துள்ளது. ஆக, மீண்டும் தொடங்கிய இடத்துக்கே வந்துள்ளார் வைகோ.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close