[X] Close

2 ஆண்டில் வன்முறையே நடைபெறவில்லை என உ.பி. முதல்வர் கூறியிருப்பது வேடிக்கை: பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி கருத்து


2

  • kamadenu
  • Posted: 22 Mar, 2019 07:36 am
  • அ+ அ-

தோல்வி பயத்தில் அதிமுக கூட்டணி குறித்து பேசுகின்றனர் என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறினார்.

சேலம் விமான நிலையத்தில் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியது:மொரப்பூர் - தருமபுரி இடையே புதிய ரயில் வழித்தட திட்டத்துக்கு மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஸ்கோயல் அடிக்கல் நாட்டுவதன் மூலம் மக்களின் 78 ஆண்டுகால கனவு நனவாகவுள்ளது. இத்திடம் நிறைவேறினால் சென்னையில் இருந்து தருமபுரிக்கு நேரடியாக ரயிலில் செல்லலாம்.

இதன் மூலம் 110 கி.மீ., தொலைவு குறையும். இரண்டு ஆண்டுகளில் இத்திடம் நிறைவடைந்து, செயல்பாட்டுக்கு கொண்டுவரப்படும். அதிமுக கூட்ட ணியில் ஒவ்வொரு வேட்பாளரும் தொகுதிக்கு ரூ.50 கோடி செலவு செய்ய திட்டமிட்டுள்ளதாகவைகோ கூறுவது, தோல்வி பயத்தில் அவரும் அவரது கூட்டணியில் உள்ளவர்களும் பேசுகின்றனர்.

எங்கள் கூட்டணி பலம் வாய்ந்த கூட்டணி. மக்கள் சார்ந்த கூட்டணி. எனவே, தோல்வி பயத்தில் யார் யாரோ எது வேண்டுமானாலும் கூறுவார்கள். இதற்கு பதில் சொல்ல தேவையில்லை. தேர்தலில் மக்கள் பதில் அளிப்பார்கள்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close