[X] Close

எம்ஜிஆர் கொள்கைகளை விட்டுத்தர மாட்டோம்- அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டம்


  • kamadenu
  • Posted: 22 Mar, 2019 07:23 am
  • அ+ அ-

புதுக்கோட்டை மாவட்டம் விராலி மலை தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினரும், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சருமான சி.விஜய பாஸ்கர் இல்லாமல், அவரது தொகுதியில் மக்களவை துணைத் தலைவர் மு.தம்பிதுரை நேற்று தனியே சென்று பொதுமக்களைச் சந்தித்தது அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

கரூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட விராலிமலை சட்டப் பேரவைத் தொகுதியில் கடந்த சில மாதங்களாக அவ்வப்போது அத்தொகுதி மக்களவை உறுப் பினரும், துணைத் தலைவருமான மு.தம்பிதுரை பொதுமக்களை நேரில் சந்தித்து கோரிக்கை மனுக் களைப் பெற்று, நடவடிக்கை எடுத்து வருகிறார்.

இந்நிலையில், முதல் முறையாக அமைச்சர் சி.விஜயபாஸ்கர் இல்லாமல், மக்களிடம் குறைகேட்க அவரது தொகுதியில் தனியே நேற்று சென்றார் மு.தம்பிதுரை. ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் தம்பிதுரையுடன் சென்றனர்.

ராஜாளிப்பட்டி, நம்பம்பட்டி, தேங்காய்தின்னிப்பட்டி, அகரப் பட்டி, கொடும்பாளூர், ராஜகிரி, விராலூர், செவல்பட்டி, வானதிராயன்பட்டி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்ற மு.தம்பி துரை, மனுக்கள் மீது நடவ டிக்கை எடுக்குமாறு அரசு அலுவலர் களுக்கு உத்தரவிட்டார்.

பெண்கள் வாக்குவாதம், மறியல்இதில், தேங்காய்தின்னிப் பட்டியில் தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் முறையாக வேலை மற்றும் சம்பளம் வழங்கவில்லை எனக் கூறி அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் தம்பிதுரையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

குடிநீர் பிரச்சினை தீர்க்கப்படாததைக் கண்டித்து, விராலிமலை தொகுதிக்குட்பட்ட செவல்பட்டிக்கு நேற்று வந்த மக்களவைத் துணைத் தலைவர் தம்பிதுரையை மறிப்பதற்காக காலிக் குடங்களுடன் செல்லும் பெண்.

இதேபோன்று, பல முறை புகார் தெரிவித்தும் தங்கள் பகுதியில் குடிநீர் பிரச்சினை தீரவில்லை எனக்கூறி செவல்பட்டியில் காலிக் குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர், காரில் இருந்து இறங்கி வந்த தம்பிதுரையிடம் பெண்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். புதிய ஆழ்துளைக் கிணறு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதி அளித்ததைத் தொடர்ந்து பெண்கள் கலைந்து சென்றனர்.

இதேபோன்று பல்வேறு இடங் களில் குடிநீர், சாலை, உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து பொதுமக்கள் தம்பிதுரையிடம் முறையிட்டனர்.

இதற்கு முன்பு அமைச்சர் சி.விஜயபாஸ்கருடன் சென்று மக்களிடம் குறைகளைக் கேட்டு மனுக்களைப் பெற்றுவந்த மு.தம்பிதுரை, நேற்று முதல் முறையாக அமைச்சர் சி.விஜயபாஸ்கரோ, அவரது தந்தை சின்னத்தம்பியோ இல்லா மல் தொகுதிக்குள் தனியே சென்று பொதுமக்களைச் சந்தித்து கோரிக்கை மனுக்களைப் பெற்றது அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடுவதற்கு அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் தந்தை சின்னத்தம்பி, கட்சியில் விருப்ப மனு அளித்திருப்பதே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

கரூர் தொகுதியில் போட்டியிட விருப்பம்

விராலிமலை அருகே பசுமேக்கிபட்டியில் மக்களவைத் துணைத் தலைவர் மு.தம்பிதுரை செய்தியாளர்களிடம் கூறியதாவது: பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்திருந்தாலும் எங்களுடைய கொள்கையிலிருந்து என்றைக்கும் மாறமாட்டோம். அதேசமயம், கூட்டணியில் எவ்வித முரண்பாடும் கிடையாது. திமுக, காங்கிரஸ் வைத்திருப்பது சந்தர்ப்பவாத கூட்டணி. இவ்விரு கட்சிகளையும் ஒழிக்கவே நாங்கள் கூட்டணி அமைத்து உள்ளோம்.

பாஜகவை நானும் கடுமையாக விமர்சனம் செய்துள்ளேன். ஆனால், அக்கட்சியினரின் நிலைப்பாட்டில் தற்போது மாற்றம் ஏற்பட்டுள்ளது. பிரதமர் மோடி, தமிழகத்துக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்து பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியுள்ளார். அதனால்தான் தற்போது பாஜகவினரை நான் வரவேற்கிறேன். கரூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட விருப்ப மனு அளித்துள்ளேன். கட்சித்தலைமை எங்கு போட்டியிடச் சொல்கிறதோ அங்கு போட்டியிடுவேன் என்றார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close