[X] Close

வங்கதேச அகதிகள் ‘கரையான்களா?’ - அமித் ஷா-வுக்கு அமெரிக்க அரசுத்துறை  அறிக்கையில் கண்டிப்பு


  • kamadenu
  • Posted: 21 Mar, 2019 18:09 pm
  • அ+ அ-

மக்களவைத் தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணியில் சிவகங்கை தொகுதி ஏறக்குறைய காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படுவது முடிவாகிவிட்ட நிலையில், அக்கட்சி சார்பில் தேர்தல் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதிலும் முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் மீண்டும் போட்டியிடுவது உறுதியான தால், அக்கட்சியினர் சுறுசுறுப்பாக தேர்தல் பணியாற்றி வருகின்றனர்.

தற்போது ஊடகங்களில் வெளியாகும் கருத்துகள், அனைவராலும் உற்று நோக்கப்படுவதால், கார்த்தி சிதம்பரம், அதற்கேற்ப சமூக ஊடகம் வாயிலான பிரச்சாரத்துக்கு முக்கியத்துவம் அளிக்க திட்டமிட்டுள்ளார். இதை அவரது மனைவி ஸ்ரீநிதி கவனிக்க உள்ளார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் தலைவர்களின் கருத்துகளைப் பரப்பவும், குறிப்பாக பெண்கள் மத்தியில் காங்கிரஸின் தேர்தல் அறிக்கையை கொண்டு சேர்க்கும் வகையிலும் பிரத்யேக ‘வாட்ஸ்-அப்’ குழுக்களை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. தொகுதி முழுவதும் ஒரு வாட்ஸ்-அப் குழுவுக்கு 256 பேர் வீதம், 500-க்கும் மேற்பட்ட குழுக்களை உருவாக்க உள்ளனர்.

இதையொட்டி, காரைக்குடியில் உள்ள காங்கிரஸ் எம்.பி. அலுவலகத்தில் பூத் கமிட்டி உறுப்பினர்கள், இளைஞர் காங்கிரஸாரிடம் கார்த்தி சிதம்பரம் நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தினர். இதில் முதல்முறையாக, தனது மனைவி ஸ்ரீநிதியை அறிமுகப்படுத்தி, அவரையும் பேச வைத்தார்.

சமூக ஊடகங்களின் தற்போதைய நிலை குறித்துப் பேசிய ஸ்ரீநிதி, ‘‘ஊடகங்களில் பிரச்சாரம் செய்வதற்கு இளைஞர் காங்கிரஸார் முக்கியத்துவம் தரவேண்டும். ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதிக்கும் தனியாக வாட்ஸ்-அப் குழுக்களை தொடங்கி விரைவாக பிரச்சாரம் செய்ய வேண்டும்’’ என்றார்.

கார்த்தி சிதம்பரம் பேசும்போது, ‘‘கட்சியின் கொள்கைகள், கருத்துகள், செய்திகள் எதுவும் பெண்களைச் சென்றடைவது இல்லை. எனவே, பெண்களை சென்றடையும் நோக்கில், சமூக ஊடகங்களை பயன்படுத்த வேண்டும். இதற்காக, ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு பொறுப்பாளர் நியமிக்கப் பட்டுள்ளனர். எந்த தொகுதியில் யார் சிறப்பாக செயல்படு கிறார்களோ அவர்களுக்கு சிறப்பு பரிசு காத்திருக்கிறது’’ என்றார்.

‘மோடிஎம்கே’ என்று விமர்சனம்

செய்தியாளர்களிடம் கார்த்தி சிதம்பரம் கூறியபோது, ‘‘எங்களது எதிர் கூட்டணியை இனிமேல் ஏடிஎம்கே என அழைக்க மாட்டேன். அவர்கள் மோடியோடு கூட்டணி சேர்ந்ததால் மோடிஎம்கே என அழைப்பேன்’’ என்றார்.

கார்த்தி சிதம்பரம் தனது மனைவி நிதியை களமிறக்கிய தன்மூலம் தான் போட்டியிடும் வாய்ப்பு தவறும் பட்சத்தில், தனது மனைவியை சிவகங்கை தொகுதி வேட்பாளர் ஆக்கலாம் என திட்டமிட்டிருப்பதாகவும் தெரிகிறது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close