[X] Close

அதிமுக கூட்டணியில் ஒரு தொகுதி ஒதுக்கீடு: தென்காசியில் களமிறங்க தயாராகிறார் கிருஷ்ணசாமி- 6-வது முறை போட்டி


krishnasamy

  • கா.சு.வேலாயுதன்
  • Posted: 04 Mar, 2019 10:10 am
  • அ+ அ-

மக்களவைத் தேர்தலில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமிக்கு அதிமுக கூட்டணியில் ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. தென்காசி தனி தொகுதியில் 6-வது முறையாக அவர் களமிறங்குவார் என்று அவரது கட்சியினர் எதிர்பார்க்கின்றனர்.

தொடக்கத்தில் காங்கிரஸ் கோட்டையாக இருந்த தென்காசி தொகுதி, 1998-ம் ஆண்டுக்குபின்னர் கை நழுவி வேறு கட்சிகளுக்கு சென்று விட்டது.

எனினும், 1998-ம் ஆண்டு முதல் இத்தொகுதியில் தொடர்ந்து 5 முறை போட்டியிட்டு, ஒவ்வொரு முறையும் 1 லட்சத்துக்கு அதிகமான வாக்குகளை பெற்று தனக்கென வாக்குவங்கி இருப்பதை கிருஷ்ணசாமி நிரூபித்து வருகிறார்.

கடந்த 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு 6 மாதத்துக்கு முன்னரே களப்பணிகளை தொடங்கினார். ஒவ்வொரு கிளைக்கழக நிர்வாகிகளையும் சந்தித்து பேசினார். தொகுதி மக்களின் பிரச்சினைகளை முன்னெடுத்து மக்கள் இயக்கங்களை நடத்தினார். இத்தொகுதியில்தான் மாநில பொதுக்குழு கூட்டத்தையும், புதிய நிர்வாகிகளுக்கு பாராட்டு விழாவையும் நடத்தினார். கிளைக்கழகங்கள் மூலம் தனக்குரிய வாக்குவங்கியை புதுப்பித்து ஏறக்குறைய தேர்தல் பணியை கிருஷ்ணசாமி முடித்த பின்னர்தான், புதிய தமிழகம் கட்சிக்கு தென்காசி தொகுதியை திமுக கூட்டணியில் அப்போது ஒதுக்கினர்.

தற்போது அதிமுக கூட்டணியில் புதிய தமிழகத்துக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. தொகுதி விவரம் அறிவிக்கப்படவில்லை. எனினும், தென்காசி தொகுதியிலேயே கிருஷ்ணசாமி மீண்டும் போட்டியிடுவார் என்று அவரது கட்சியினர் தெரிவிக்கின்றனர்.

இத்தொகுதியில் உள்ள தாழ்த்தப்பட்டவர்கள், அதிமுக மற்றும் பாஜக வாக்கு வங்கியை நம்பி மீண்டும் தனிச்சின்னத்தில் களமிறங்க திட்டமிடுகிறார் கிருஷ்ணசாமி.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close