[X] Close

மக்கள் நீதி மய்யத்தின்  வேட்பாளர் பட்டியல் 3-வது வாரத்தில் வெளியீடு?


makkal-neethi-maiyam

  • kamadenu
  • Posted: 04 Mar, 2019 07:02 am
  • அ+ அ-

மக்கள் நீதி மய்யம் சார்பில் மக்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை இம்மாதம் 3-வது வாரத்தில் வெளியிட அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மக்கள் நீதி மய்யம் 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஏற்கெ னவே அறிவித்துள்ளார். இதன் அடிப்படையில், மக்களவை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிட விரும்புவர்கள் விருப்ப மனுக்களை தாக்கல் செய்யலாம். கட்சியின் உறுப்பினராக இல்லாதவரும் விருப்ப மனு அளிக்கலாம் என்று கமல்ஹாசன் அறிவித்தார்.

இதை தொடர்ந்து, மக்கள் நீதி மய்யம் சார்பில் கடந்த 28-ம் தேதி விருப்ப மனு விநி யோகம் தொடங்கியது. விருப்ப மனு தாக்கல் செய்ய ரூ.10 ஆயிரம் கட்டணமாக நிர்ணயிக் கப்பட்டுள்ளது.

இதுவரை சுமார் 250 விருப்ப மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. விருப்ப மனுக்களை தாக்கல் செய்ய, வரும் 7-ம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யத்தின் தலைமை அலுவகத்தில் தேர்தல் குழுவின் மூலம் நேர் காணல் நடத்தப்பட உள்ளது. நேர்காணல் நடத்தப்பட்டு ஒரிரு நாளில் வேட்பாளர் பட்டியல் தயாரிக்கப்பட்டு இம்மாதம் 3-வது வாரத்தில் வெளியிட கமல்ஹாசன் முடிவு எடுத்துள்ள தாக தகவல்கள் வெளியாகி யுள்ளது.

இதுதொடர்பாக, மக்கள் நீதி மய்ய வட்டாரங்களில் கேட்ட போது, “விருப்ப மனு பெறப்பட்ட தும் அதிகாரப்பூர்வ தேதி அறி விக்கப்பட்டு நேர்காணல் நடத்தப்படும். அதன்பின் ஒரு சில தினங்களில் வேட்பாளர் பட்டியல் தயார் செய்யப்படும். வேட்பாளர் பட்டியல் வெளியிடும் தேதி முடிவு செய்யப்படவில்லை. இம்மாதம் 3-வது வாரத்தில் வேட்பாளர் பட்டியல் வெளியிடுவது பற்றி ஆலோசிக்கப்பட்டு வருகிறது” என்றனர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close