[X] Close

நாங்க தாயில்லா பிள்ளைகள்: செல்லூர் ராஜூ


chellur-raju-speech

  • kamadenu
  • Posted: 03 Mar, 2019 07:46 am
  • அ+ அ-

விழாவில் அமைச்சர் செல்லூர் கே.ராஜு பேசியதாவது:

எதையும் எடை போட்டு பார்க்கும் விவசாயிகள், அதிமுக அரசு செய்ததையும் எடைபோட்டு பார்த்து எங்களுக்கு ஆதரவாக இருங்கள். 2017-18-ல் செயல்படுத்தப்பட்ட கூட்டுப் பண்ணைத் திட்டம் வெளிநாடுகளில் மிகப் பெரிய வெற்றி பெற்றது. தற்போது இந்த திட்டம் தமிழகத்திலும் வெற்றிகரமாக செயல்படுத்தப்படுகிறது.

சிறு, குறு விவசாயிகள் விளைவித்த பொருட்களுக்கு உரிய விலை கிடைக்காமல் நஷ்டம் அடைகின்றனர். அதிமுக அரசால் 2,104 இடங்களில் வேளாண் சேவை மையங்கள் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளன.

இந்தியாவில் இந்த அளவுக்கு எந்த அரசும் விவசாயிகளுக்கு திட்டங்களை செயல்படுத்தவில்லை. ஜெயலலிதாவும் ஒரு விவசாயிதான். அதுபோல், தற்போதைய முதல்வர் பழனிசாமியும் ஒரு விவசாயி. அதனால், விவசாயிகளின் நிலை அவர்களுக்கு நன்றாகத் தெரியும்.

நாங்கள் தாயில்லாத பிள்ளைகள். அதனால், எங்களை எளிதாக வீழ்த்தி விடலாம் என்று எதிர்க்கட்சிக்கார்கள் நினைக்கிறார்கள். நீங்கள் எங்களுக்கு ஆதரவாக நிற்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close