[X] Close

திமுக, காங்கிரஸ் கூட்டணி 40 தொகுதியிலும் வெற்றி பெறும்: எச்.வசந்தகுமார்


hvasanthakumar-speech

  • kamadenu
  • Posted: 02 Mar, 2019 11:59 am
  • அ+ அ-

திமுக, காங்கிரஸ் கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் எச்.வசந்தகுமார் தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சியின் பூத் கமிட்டி கூட்டம் திண்டுக்கல்லில் நேற்று நடந்தது. இதில் கலந்து கொள்ள வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:திமுக, காங்கிரஸ் கூட்டணி தமிழகத்தில் வலுவாக இருக்கிறது. இக்கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும். மத்தியில் காங்கிரஸ் தலைமையில் ஆட்சி ஏற்படும்.

அதிமுக, பாமக கூட்டணி வெறும் உடன்பாடில் மட்டும்தான் இருக்குமே தவிர வெற்றியைத் தருவதற்கு வாய்ப்பில்லை. அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி வாய்ப்பு கொடுத்தால் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிடுவேன். த.மா.கா. நேரடியாக எங்களுடன் வர வாய்ப்பில்லை. நாங்கள் அக்கட்சிக்கு வரவேற்பு கொடுக்கமாட்டோம்.

பணத்தை வைத்துத்தான் வெற்றி, தோல்வி என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. திமுக, காங்கிரஸ் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. காரணம் பா.ம.க., அதிமுக கூட்டணியை மக்கள் விரும்பவில்லை. அதிமுக அமைச்சர்கள் குறித்து ஊழல் பட்டியலை ஆளுநரிடம் கொடுத்துவிட்டு இன்று அதிமுகவுடன் கூட்டணி என்று சொல்வதை மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.

கன்னியாகுமரி மாவட்டத்துக்கு 40 ஆயிரம் கோடி ரூபாய்க்கு திட்டங்கள் வந்துள்ளதாக ஒரு அமைச்சர் கூறுகிறார். எங்கு ஒதுக்கியிருக்கிறார் எனத் தெரியவில்லை. இரண்டு பாலம்தான் கட்டியிருக்கிறார். மத்திய ரிசர்வ் படையைச் சேர்ந்த 40 வீரர்கள் இறந்ததற்கு காரணம் மத்திய அரசுதான். உளவுத் துறை தகவல் கொடுத்தும் காப்பாற்றத் தவறிவிட்டனர் என்றார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close