[X] Close

முஸ்லிம் அமைப்புகளை குறிவைக்கும் தினகரன்: கலக்கத்தில் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள்


dhinakaran-lok-sabha

  • kamadenu
  • Posted: 02 Mar, 2019 07:27 am
  • அ+ அ-

மக்களவை தேர்தலில் 38 தொகுதிகளில் போட்டியிட உள்ள தாக அறிவித்துள்ள அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தின கரன், முஸ்லிம் அமைப்புகளை குறிவைத்துள்ளதால் திமுக, அதிமுக கட்சிகள் கலக்கத்தில் உள்ளன.

மக்களவை பொதுத்தேர் தலுக்கான அறிவிப்பு ஒருசில தினங்களில் வெளியாக உள்ளது. இந்நிலையில் கூட்டணிக்கான அனைத்து முயற்சிகளையும் தேசிய, மாநில கட்சிகள் மேற் கொண்டு வருகின்றன. தமிழகத்தை பொறுத்தவரை திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் ஒரு சில கட்சி களுடன் கூட்டணியை உறுதி செய்துவிட்ட நிலையில், மேலும் பல கட்சிகளுடன் பேசி வருகின் றன. விரைவில் கூட்டணி இறுதி யாகிவிடும் என அக்கட்சிகள் சார்பில் கூறப்படுகிறது.

இந்நிலையில் அதிமுகவில் இருந்து பிரிந்து வந்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற தனிக்கட்சியை தொடங்கியுள்ள தினகரன், தமிழகத்தில் 38 தொகுதி களிலும் தனித்து போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார். முன்னதாக, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் கூட்டணிக்கான பரபரப்பில் இருந்த நிலையில், தினகரன் மாவட் டம்தோறும் சென்று மக்களை சந்தித்து வந்தார். அவர் சென்ற இடங்களில் அதிகளவில் மக்கள் கூட்டம் கூடியது.

இந்தக் கூட்டங்களில் தேர்தல் கூட்டணி குறித்து தினகரன் எந்த அறிவிப்பையும் வெளியிட வில்லை. தேமுதிக உள்ளிட்ட சில கட்சிகளிடம் அவர் பேசி வருவதாக கூறப்பட்டது. ஆனால், இதை மறுக்கும் வகையில், தமிழகத்தில் 38 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தப்போவதாக அவர் அறிவித் தார். குறிப்பாக, அதிமுக நேரடியாக களமிறங்கும் தொகுதிகளை விட, கூட்டணி கட்சிகளின் தொகுதிகளை அவர் குறிவைத்துள்ளதாக கூறப் படுகிறது. அந்த தொகுதிகளில் ஏற்கெனவே அதிமுக சார்பில் வென்றவர்களுக்கு சீட் வழங்கா விட்டால், அவர்கள் தேர்தல் பணி யில் ஈடுபடுவதில் சுணக்கம் காட்டலாம் என்பதால் அவர் களை தங்கள் வசம் இழுக்க திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படு கிறது. இது அதிமுக தரப்பை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

இதற்கிடையில், தினகரன் சிறிய அளவிலான முஸ்லிம் கட்சிகள் மற்றும் முஸ்லிம் அமைப்புகளிடம் ஆதரவு கேட்டு அவர்களை அணுகி வருவதாக தகவல் வெளி யாகியுள்ளது. சமீபத்தில், எஸ்டிபிஐ நிர்வாகி்கள் தினகரனை சந்தித்து ஆதரவளித்துள்ளனர். இந்நிலையில் நேற்று, இந்திய தேசிய லீக் கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் முகமது சுலைமான், முன்னாள் எம்எல்ஏ எம்.ஜி.கே.நிஜாமுதீன், மாநில தலைவர் ஏ.எம்.அப்துல் காதர் உள்ளிட்டோர், நேற்று தினகரனை நேரில் சந்தித்து தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்தினர். முஸ்லிம் அமைப்புகள் கோரிக்கை வைக்கும் பட்சத்தில் குறிப்பிட்ட தொகுதியில் அவர்கள் சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

மேலும், தினகரன் தரப்பில் இருந்தும் பல்வேறு முஸ்லிம் அமைப்புகள், கட்சிகளை தொடர்பு கொண்டு பேசி வருவதாக கூறப் படுகிறது. இது திமுக, அதிமுக கட்சிகள் இடையில் சற்றே கலக் கத்தை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் போது, சுயேச் சையாக போட்டியிட்ட தினக ரனுக்கு, அந்த தொகுதியில் உள்ள பல முஸ்லிம் அமைப்புகள் ஆதரவாக இருந்ததுடன், அதிக அளவிலான வாக்குகளையும் பெற உதவின. பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்துள்ளதால், இஸ்லாமிய அமைப்புகளோ, கட்சிகளோ அந்த கூட்டணியில் இணைய வாய்ப்பில்லை.

இதனால், திமுக- காங்கிரஸ் கூட்டணிக்கு அவர்கள் ஆதரவளிப்பார்கள் என திமுக நம்பியிருந்தது. இந் நிலையில் முஸ்லிம் அமைப்புகளை குறிவைக்கும் தினகரனின் நட வடிக்கையால் திமுகவும் கலக் கத்தில் உள்ளது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close