[X] Close

அடுத்தடுத்து கேள்வி கேட்ட மாணவிகள்; அதே வேகத்தில் சொதப்பிய ராகுல்


rahul-gandhi-gives-bizarre-answers-to-students-in-amethi

  • பாரதி ஆனந்த்
  • Posted: 17 Apr, 2018 10:42 am
  • அ+ அ-

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உத்தரப் பிரதேச மாநிலம் அமேதியில் மூன்று நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அமேதியில் அரசுப் பள்ளிக்கூடத்துக்குச் சென்ற அவரிடம் மாணவிகள் அடுத்தடுத்து கேள்விகளை எழுப்பினர்.
அதற்கு ராகுல் காந்தி சரியான பதில்களைக் கூறாமல் சொதப்ப அங்கு சிரிப்பலை எழுந்தது.

கேள்வி 1: அரசாங்கம் பல்வேறு சட்டங்களையும் நிறைவேற்றுகிறது ஆனால் அவை ஏன் கிராமங்களில் சரியாக அமல் படுத்தப்படுவதில்லை?
பதில்: இந்தக் கேள்வியை நீங்கள் பிரதமர் மோடியிடம்தான் கேட்க வேண்டும். இங்கு நடப்பது மோடி ஆட்சி. எனது ஆட்சி அல்ல. எங்கள் கட்சி (காங்கிரஸ்) எப்போது ஆட்சிக்கு வருகிறதோ அப்போதுதான் நீங்கள் இந்தக் கேள்வியைக் கேட்க வேண்டும்.

ராகுலின் இந்தப் பதிலைக் கேட்டு அங்கிருந்த மாணவிகள் சிரித்தேவிட்டனார். ராகுல் இந்தக் கேள்விக்கு தெரிந்து பதில் சொன்னாரா இல்லை தெரியாமல் பதில் சொன்னாரா என்பது தெரியவில்லை. எனெனில் நாடாளுமன்றம் இயக்கும் சட்டங்களை மாநில அரசுகளே அமல்படுத்துகின்றன மத்திய அரசு அல்ல.

கேள்வி 2: அமேதியின் வளர்ச்சி ஏன் பின்தங்கியிருக்கிறது?
பதில்: அமேதியை ஆள்வது யோகி. நான் அமேதியில் இருந்து தேர்வு செய்யப்பட்ட எம்.பி. மட்டுமே. எனது வேலை மக்களவையில் சட்டங்களை உருவாக்குவது. உத்தரப் பிரதேசத்தை ஆள்வது யோகி ஆதித்யநாத்தின் வேலை. ஆனால், அவர் வேறு வேலைகளில் பரபரப்பாக இருக்கிறார். அவர் மின்சார பிரச்சினைகள், குடிநீர் சிக்கல்கள், கல்வி ஆகியவற்றில் கவனத்தை செலுத்தாமல் கோபத்தை பரப்பிக் கொண்டிருக்கிறார.

அடுத்த கேள்வியைக் கேட்க மாணவிகள் கேட்க முற்படும்போதே ராகுல் அந்த இடத்தைவிட்டு நகர்ந்து சென்றுவிட்டார்.
ஒரு எம்.பி. என்பவர் நாடாளுமன்றத்தில் சட்டங்கள் இயற்றுவதைத் தவிர அவருக்கு ஒதுக்கப்படும் தொகுதி மேம்பாட்டு நிதியைக் கொண்டு தொகுதியில் நலத்திட்டங்களை செயல்படுத்துவதும் அவசியம். தங்கள் தொகுதியில் மத்திய அரசின் நலத் திட்டங்களோ அல்லது மாநில அரசின் திட்டங்கள் தொகுதிக்கு விரைந்து வந்து சேர்ந்திடவோ ஒரு எம்.பி., பாலமாக இருக்கலாம். இந்த அடிப்படைகூட தெரியாதவர்போல் ராகுல் கூறிய பதில் விமர்சனத்துக்குள்ளாகிவருகிறது.

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close