[X] Close

பாஜக, அதிமுக எதிர்ப்பு அலையால் தேர்தலில் அமமுக வெற்றி பெறும்: தங்க.தமிழ்ச்செல்வன் கருத்து


ttv-dinakaran

  • kamadenu
  • Posted: 27 Feb, 2019 11:38 am
  • அ+ அ-

பாஜக, அதிமுக எதிர்ப்பு அலையால் தேர்தலில் அமமுக வெற்றி பெறும் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் கொள்கைப் பரப்புச் செயலாளர் தங்க.தமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.

திருவாரூர் மாவட்டம் மன்னார் குடியில் நேற்று முன்தினம் செய்தி யாளர்களிடம் கூறியதாவது:2016-ம் ஆண்டு தேர்தல் வாக்குறுதியில், அனைவருக்கும் செல்போன் வழங்கப்படும் என்று கூறியதை தமிழக அரசு நிறை வேற்றவில்லை. அம்மா திட்டம் செயலிழந்துவிட்டது. அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் வரும் மக்களவைத் தேர்தலில் தேசிய கட்சியுடன் கூட்டணி அமைக்காது. மாநில கட்சிகளுடன்தான் கூட்டணி அமைக்கும். பாரதிய ஜனதா கட்சியின் எதிர்ப்பு அலையும், அதிமுக எதிர்ப்பு அலையும் இணைந்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை வெற்றி பெறச் செய்யும்.

அதிமுக, பாஜக, பாமக கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி. எங்கள் கூட்டணி குறித்து இன்னும் ஒரு வாரத்துக்குள் தெரியவரும். எஸ்.டி.பி.ஐ.யுடன் கூட்டணி உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

குக்கர் சின்னம் அமமுகவுக்கு கிடைக்கும். மக்களவைத் தேர்த லுடன், திருவாரூர் தவிர்த்த மற்ற சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்பட வாய்ப்பில்லை என்றார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close